Skip to main content

TDH ASK TINKU 01 ENGLISH TRAINING THROUGH TAMIL EZHILARASAN translation


TDH ASK TINKU TRANSLATION
..
-
.
.
.
PLEASE WRITE IN A RULED NOTEBOOK
IN TWO COLOURS

ANSWERsolar eclipse 

டிங்குவிடம் கேளுங்கள்: 07 Feb 2018  Translation  (Point no. 2)
 2) சூரிய கிரகணத்தை ஏன் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, டிங்கு?
Why should not we see the solar eclipse with naked eye, Tinku?

–உ.தீனாதரன், 3-ம் வகுப்பு, மேடவாக்கம், சென்னை.
Deenaatharan, 3rd standard, Medavakam, Chennai.

சூரியனின் கதிர்கள் மிகவும் பிரகாசமானவை. நாம் சாதாரண நாட்களில்கூட சூரியனை நேரடியாகப் பார்க்கக் கூடாது. 
The rays of the sun are very powerful. We should not try to see the sun directly even during the normal days.

கண்களுக்கு அந்த ஒளியால் பாதிப்பு ஏற்படலாம். 
Our eyes may get damaged due to  that.

ஓர் ஆடியில் சூரியக் கதிர்களைக் குவித்து, அந்த இடத்தில் ஒரு காகிதத்தை வைத்தால் தீப்பற்றி எரிந்துவிடும்.
If you focus the sun rays with the help of a lens and keep a paper there, it will get ignited or catch fire.

உடலில் அந்தக் கதிர்கள் பட்டால் புண்ணாகிவிடும்.
If those rays happen to fall on our body, our skin will get burnt.

தொலைநோக்கியில் கண்களுக்குப் பாதுகாப்பான ஃபில்டர் பொருத்தப்பட்டிருப்பதால், சூரியனைப் பார்த்தாலும் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.
If we see the sun with protective filters in telescope, then nothing will happen to our eyes.

சூரிய கிரகணத்தின்போது நேரடியாகப் பார்த்தால் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.
There is no scientific evidence that seeing the sun during a solar eclipse with naked eyes will damage our eyes.

என்றாலும் கண்கள் நமக்கு முக்கியமானவை.
However our eyes are very important to us. 

அவற்றை முன்னெச்சரிக்கையோடு பாதுகாத்துக்கொள்வதற்காகவே சூரியக் கண்ணாடியை அணிந்துகொண்டு, சூரிய கிரகணத்தைப் பார்க்கும்படிச் சொல்கிறார்கள், தீனாதரன். 
Only in order to take precautions to protect our eyes, we are being told to see the solar eclipse through protective filters, Deenaatharan. 

சூரியக் கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதைத் தவிர்த்துவிடுவதுதான் நல்லது.
.
*** ((())) ***
ANSWER : WEIGHT LOSS

டிங்குவிடம் கேளுங்கள்: 07 Feb 2018 

 1) என் உடல் எடையைக் குறைக்க எளிய வழிகளைச் சொல்ல முடியுமா, டிங்கு?
Tinku can you please explain to me some methods to lose my body weight?

–எஸ்.எஸ்.எம்.எஸ். மணியன், 8-ம் வகுப்பு, ரோஸ்மேரி மெட்ரிக் பள்ளி, பாளையங்கோட்டை.
S.Maniyan, 8th dt standard, Rosesary Matriculation school, Palayamkottai.

உங்கள் எடை எவ்வளவு என்று நீங்கள் சொல்லவில்லை, மணியன்.
Maniyan you have not told me your weight.

நீங்கள் நிஜமாகவே பருமனாக இருக்கிறீர்களா, அல்லது பருமனாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறீர்களா என்றும் தெரியவில்லை.
I am not sure whether you are really over weight or you just think that you are over weight.

உங்கள் வயது சிறுவர்கள் அதிகபட்சம் 45 கிலோவரை இருக்கலாம்.
Students of your age can be a maximum of  45 kilograms

அதற்கு மேல் நீங்கள் இருந்தால், நான் சொல்லக்கூடிய சில விஷயங்களைப் பின்பற்றலாம்.
If your weight exceeds this, then you can follow the tips that I had given here.

நொறுக்குத்தீனிகள் (குறிப்பாக பாக்கெட்களில் அடைத்து விற்கப்படுபவை), குளிர்பானங்கள், சாக்லெட், ஐஸ்க்ரீம், பிஸ்கெட் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
Please avoid eating snacks especially that are stored in packets. Also avoid cool drinks, chocolate, ice cream and biscuits.

பழங்கள், நார்ச்சத்து மிக்க காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Eat plenty of vegetables that have lot of fibre.

இரவு உணவு சாப்பிட்டு, ஒரு மணி நேரம் கழித்துத் தூங்கச் செல்லுங்கள்.
Go to sleep in the night after one hour after finishing your dinner.

குளிர்ந்த நீரைப் பருகுவதைவிட, இளஞ்சூடான நீரைப் பருகுங்கள்.
Instead of drinking cold water, try to drink warm water.

ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சிப் பார்ப்பது, மொபைல் போனில் விளையாடுவது என்று ஒரே இடத்தில் இருக்கக்கூடிய பொழுதுபோக்குகளைத் தவிர்த்து, வெளியில் சென்று உங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடுங்கள்.
While you are free, instead of engaging yourself in sedentary activities like watching TV programmes or playing games in the mobile phone better go out and engage yourself in sports activities that fully involves your body muscles.

காலை அல்லது மாலையில் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்யுங்கள்.
Daily go for walk for 30 minutes either in the morning or in the evening.

ஒரே நாளில் உடலை இளைக்க வைக்க முடியாது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, இவை எல்லாவற்றையும் அளவோடு செய்யுங்கள்.
Remember that you can't reduce your body weight overnight. So do all of these with in proper limits.

உடல் எடை குறையும், மணியன்.
Then definitely your body weight will get reduced, Maniyan.

 அப்படியும் எடை குறையாவிட்டாலோ, அளவுக்கு அதிகமான எடை இருந்தாலோ மருத்துவரைப் பாருங்கள்.
Even then, If your weight doesn't get reduced or you are over weight better meet a doctor and get his advice.

3) சில நேரம் நான் படிக்கப் புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் தூக்கம் வந்துவிடுகிறதே, ஏன் டிங்கு?
-- Sometimes whenever I take a book to read, immediately I get sleep. What should I do TINKU? 

–வ. வர்ஷினி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.
V. Vashini, 4th standard, Pichandi Middle School, Boodi Naickanoor. 

எந்த நேரத்தில், எப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தகத்தைக் கையில் எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தூக்கம் வரலாம், வர்ஷினி. 
For getting sleep - what type of book you take, at what surrounding you sit and at what time -- all these things matters, Varshini.

அதிகாலை தூங்கி எழுந்து, முகம் கழுவி, புத்தகத்தை எடுத்தால் தூக்கம் வராது. 
Early morning immediately after getting up, if you wash your face and take a book, you will not get sleep.

அதுவே பள்ளி சென்று, நாள் முழுவதும் ஓடியாடிக் களைத்து, சாப்பிட்ட பிறகு புத்தகத்தை எடுத்தால் தூக்கம் நிச்சயம் வரும். 
On the contrary, after attending school, after playing for the full day and after eating food, if you take a book, you will definitely get sleep.

அப்போது மூளை, கண்கள், உடல் எல்லாம் ஓய்வை எதிர்பார்த்துக் காத்திருக்கும். 
At that time, the brain, eye and the whole body will be anticipating rest. 

அதனால் மாலை வேளைகளில் சாப்பிடுவதற்கு முன்பு படித்துவிடுங்கள்.
Therefore in the evenings, study before you eat

நல்ல டியூப்லைட் வெளிச்சத்தில் படித்தால் தூக்கம் வராது. மங்கலான ஒளியில் படித்தால் தூக்கம் வரும். 
If you read under the bright light of a tubelight, you will not get sleep. However, if you read in dim light, you will get sleep.

அதேபோல உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொண்டு படித்தால் தூக்கம் வராது. 
Similarly, if you read keep your body in the right position, then you will not get sleep.

சோஃபாவில் சற்றுச் சாய்ந்துகொண்டு படித்தால் தூக்கம் வரும். 
If you read in a sofa, in a inclined position, you may get sleep. 

நீண்ட நேரம் தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டிருக்காமல், நடுநடுவே கண்களைச் சுற்றுப்புறம் நோக்கித் திருப்புங்கள். 
Instead of studying continuously staring at a book, look at the environment and have a glance now and then.

கண்களை மேலும் கீழும் உருட்டிப் பயிற்சி கொடுங்கள். 
Rotate your eye balls up and down and give them some exercises. 

குளிர்ந்த நீரால் கண்களைச் சுத்தம் செய்யுங்கள். கண்கள் எளிதில் சோர்வடையாது.
Wash your eyes with cold water and your eyes will not get tired easily. 

நன்றி : தி இந்து  -- டிங்குவிடம் கேளுங்கள்: 07 Feb 2018
Courtesy : Tamil The Hindu - 07 Feb 2018. 
 
THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES
Collected by

Ezhilarasan Venkatachalam
TAMIL BASED ENGLISH TRAINER
Inventing new methods to Learn English
SALEM, SOUTH INDIA.


Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...