Skip to main content

Daughter buying rubber toys Translation SANDWICH ENGLISH TRAINING THROUGH TAMIL Ezhilarasan childcare article




My daughter buying rubber toys in Exhibition Translation SANDWICH version 01


My Childcare 2018 article 01
என் குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டுரை 2018 (01)

.--


 கண்காட்சியில் ரப்பர் பொம்மைகளை  என் மகள் வாங்கும் நிகழ்வு

NOW SALEM IS AGOG AND EXPERIENCING BUSTLING ACTIVITY FOLLOWING THE ARRIVAL OF THE TAMIL MONTH "AADI".
This takes me back to 2004 ...NOSTALGIA !!

இப்போது சேலத்தில் தமிழ் மாதம் "ஆடி" வருகையை முன்னிட்டு பரபரப்பும்
ஆரவாரமும் கூடி உள்ளது. இது என்னை மீண்டும் 2004 ஆம் ஆண்டிற்கு எடுத்து செல்கிறது. என் அந்த நாள் நினைவுகள் ! 

Let me narrate an incident that happened around 2004, when my younger daughter, Trisha (named changed) was about 8 or 9 years old.

இந்த சம்பவம் 2004 ஆண்டு வாக்கில்
நடந்தது. அப்போது என் இளைய மகள், திரிஷாவிற்கு  (பெயர் மாற்றப்பட்டது) சுமார் 8 அல்லது 9 வயது இருக்கும்.

As a family along, with my two daughters, we went to the Government Exhibition in the Salem Boose Maidan.

ஒரு குடும்பமாக என் இரண்டு மகள்களுடன் நாங்கள் நால்வரும்
அரசாங்கம் கண்காட்சியை காண சேலம் போஸ் மைதானத்திற்கு சென்றோம்.

At our home itself I took enough cash to spend for eating, purchase etc. And also gave a one hundred rupee note, both to my younger and elder daughter. Then I said to both,  "You can either spend everything at the exhibition or save a part of it and put it in your hundial."

எங்கள் வீட்டில் புறப்படும் முன் உணவு,  பொருட்கள் வாங்க முதலியனவற்றிற்கு செலவிட போதுமான பணம் நான் எடுத்துக் கொண்டேன். பின்னர்  நான் என் இரண்டு மகள்களையும் கூப்பிட்டு ஆளுக்கு ஒரு நூறு ரூபாய நோட்டை கொடுத்து , "நீங்கள் இதை முழுவதும் கண்காட்சியில் செலவு செய்து கொள்ளலாம் அல்லது அதை சேமித்து வைத்து உங்கள் உண்டியலில் போட்டுக் கொள்ளலாம்".என்றேன்.

Logically speaking, I should have given at least Rs.150 for my elder daughter who was 4 years elder than the other. However, since my younger one may not understand it and may think it as impartial, I gave only Rs.100 to each of them.

தர்க்கரீதியாக யோசித்தால், என் மூத்த மகளுக்கு குறைந்தபட்சம் ரூ.150 நான்  கொடுத்து இருக்க வேண்டும் என்னென்றால் அவள் இளைய மகளை விட நான்கு ஆண்டுகள் மூத்தவள். எனினும், என் இளைய மகள் அதை புரிந்து கொள்ள மாட்டாள் என்பதாலும் நான் பாரபட்சமாக நடக்கின்றேன் என்று நினைக்கலாம் என்பதாலும், அப்படி செய்ய வில்லை. நான ஆளுக்கு நூறு ரூபாய மட்டுமே கொடுத்தேன்.

Then it was a big money for a 9 year old girl. She asked me in amazement, "Dad, do you really mean, I can buy anything I want at the fair with this money?" I told, "Yes, but I will not give you anything extra. So better plan and buy things accordingly".

அன்று ஒரு 9 வயது சிறுமியிற்கு அது ஒரு பெரிய தொகை தான். ஆகையால் அவள் என்னை திகைப்புடன், கேட்டாள்,  "அப்பா, நீங்கள் உண்மையாகத் தான்  சொல்கிறீர்களா ? கண்காட்சியில் இதை கொண்டு நான் என்ன வேண்மானாலும் வாங்கிக் கொள்ளலாமா? " என்றாள். நான் சொன்னேன், "ஆம் கண்ணே, ஆனால் நான் இனி உனக்கு கூடுதலாக பணம் கொடுக்க மாட்டேன். ஆகையால் நீ எதையும் .வாங்கும் முன் 
நல்லா யோசனை செய்து பிறகு பொருட்களை வாங்க வேண்டும் ". என்றேன்.

We went inside the exhibition and went on strolling leisurely, watching the products in all the shops and all different types of people you had come from nearby villages and towns.

நாங்கள் கண்காட்சி உள்ளே சென்று 
அங்கும் இருக்கும் அனைத்து கடைகளில் இருக்கும் பொருட்களை   பார்த்து கொண்டே நிதானமாக நடந்தோம். அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் ஊர்களில் இருந்து பல்வேறு வகையான மக்கள் அங்கு வந்து இருந்தனர்.
 .
There was fine dust floating in the air because of everybody walking in the dusty ground. It was a bit suffocating me. There were big stalls and also petty shops like those we see on the pavements in roads and streets.

எல்லோரும் மண் தரையில் நடந்ததால் காற்றில் மிதக்கும் தூசி நிறைந்து இருந்தது. அது எனக்கு கொஞ்சம்  மூச்சு தினறல் கொடுத்தது. அங்கு பெரிய கடைகளும் இருந்தன மற்றும் சாலைகள், தெருக்களில் இருக்கும் நடைபாதை கடைகள் போல, சிறு சிறு கடைகளும் இருந்தன.

It was at that time the attractive and colour mini toys that were designed  from rubber were introduced in the market. It can be used by the school going kids as a pencil eraser too.

அந்த நேரத்தில் தான் சந்தையில் கவர்ச்சிகரமான வண்ண வண்ண மினி ரப்பர் பொம்மைகள்   அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளி போகிறது குழந்தைகள் பென்சில் அழிப்பான் அல்லது "எரேசர்" போலவும் அதை பயன்படுத்த முடியும் 

My younger daughter, Trisha approach a vendor sitting on the floor and selling such mini rubber toys. She enthusiastically took a piece and enquired the price. The vendor told something. Immediately on hearing the price, she dropped it, as if it was a burning piece of coal.

என் இளைய மகள், திரிஷா தரையில் உட்கார்ந்து மினி ரப்பர் பொம்மைகள்  விற்பனை செய்த ஒரு  விற்பனையாளரை அணுகினாள். அவள் ஆர்வத்துடன் ஒரு பொம்மையை எடுத்து அதன் விலையை விசாரித்தாள். விற்பனையாளர் ஏதோ விலை கூறினார். விலையை கேட்ட  உடனே அவள் சட்டென்று, ஒரு எரியும் துண்டு நிலக்கரியை கீழே போடுவது போல, பொம்மையை கீழே போட்டாள்.

Then we kept on moving slowly. And again there was another vendor selling the same toys. Once again she approached him and enquired the price. Again she dropped it because she thought it was very high. 

பின்னர் நாங்கள்  மெதுவாக நகர்ந்தோம். மீண்டும் அங்கு மற்றொரு விற்பனையாளர் அதே பொம்மைகளை விற்பனை செய்தார். மீண்டும் அவள் அவரை அணுகி விலையை விசாரித்தாள். மீண்டும் அவள் அதை வேகமாக கீழே வைத்து விட்டாள். ஏனெனில், அவள் சிந்தனை படி அதன் அந்த விலை  மிக அதிகமாக இருந்தது.

All along I was watching this quietly. I understood she had difficulty to decide. She was finding it difficult to part with a few rupees. Yet she could not avoid being attracted my the cute rubber toys.

இதை அனைத்தும் நான் அமைதியாக  கவனித்துக் கொண்டே இருந்தேன். முடிவு செய்வதில் அவளுக்கு சிரமம் இருந்ததை நான் புரிந்து கொண்டேன். ஒரு சில ரூபாய்களை கூடுதலாக செலவு செய்யவும் அவளுக்கு கடினமாக இருந்தது. அதே சமயம் அழகான ரப்பர் பொம்மைகளையும் அவளால் வாங்காமல் தவிர்க்கவும்  முடியவில்லை

So, I interfered and said, "Hey, dont worry too much. Though I told at home I will not give you any money more than the one hundred rupees. Now I feel like relaxing it a bit. If required, I will give you some more money to buy things, if you have spend it completely.

எனவே, நான் குறுக்கிட்டு், "கண்ணே,  அதிகம் கவலைப்பட வேண்டாம். வீட்டில் நான் நூறு ரூபாயைவிட மேலும் பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். என்றாலும்  அந்த விதியை இப்போது தளர்த்த விரும்புகிறேன். தேவைப்பட்டால் மேலும் பொருட்கள் வாங்க நான் உனக்கு இன்னும் சில ரூபாய்  கொடுக்க முடிவு செய்துள்ளேன்", என்றேன்.

So go ahead and buy the toy, if you really like it". I think she felt relieved and so she bought it after my reassurance.

எனவே  நீ அந்த ரப்பர் பொம்மையை வாங்கிக் கொள்ளலாம். அதில் அவள் நிம்மதி அடைந்தாள் என்று எண்ணுகிறேன். என் வாக்குறுதியிற்கு பின் அவள் அதை வாங்கினாள்.

That day I hope this one hundred rupees would have taught her little economics. I think it would have been her first lesson to manage funds shortage or excess funds in real life.

அன்று இந்த ஒரு நூறு ரூபாய் நோட்டு
பொருளாதாரம் பற்றி அவளுக்கு சிறிது அறிவு புகட்டி இருக்கும் என்று எண்ணுகிறேன். மேலும் அவளுக்கு நிஜ வாழ்க்கையில் நிதி பற்றாக்குறையை எப்படி நிர்வகிப்பது அல்லது நிதி அதிகம் இருந்தால் அதை எப்படி நிர்வகிப்பது என்று அவள் அறிந்து கொள்ள இது ஒரு ஆரம்ப பாடமாக இருந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.

Written
by
Ezhilarasan Venkatachalam
English Trainer for Tamil Speaking People
Salem, South India.

ஆங்கிலத்தில் எழுதியது
மற்றும்
தமிழ் மொழிபெயர்ப்பு

எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் பேசும் மக்களுக்கு
ஆங்கில் பயிற்சியாளர்
சேலம், தென் இந்தியா.

For more Childcare related articles
Please Visit  (மேலும் குழந்தை வளர்ப்பு தொடர்புடைய கட்டுரைகள படிக்க செல்க)

http://e3childcare.blogspot.in

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...