Skip to main content

Translation 86 year old man feeds birds and animals for 65 years Ezhilarasan

A 86 year old person of Salem daily feeds birds and animals.
- travelling 20 kms a day 

.



"Is he a saint or just a citizen of Salem?"

Summary of a Tamil article.

A touching narration by a reporter.

He meets a 86 year old man who daily spends Rs.2,000 for feeding stray dogs, squirrels, bandicoots, monkey and birds in many places in and around Salem ---like the Collector's bungalow, Yercaud foothills, Chettysavadi etc. He covers about 20 kms a day.

It seems he daily earns Rs.2,000 by doing traditional medication service. (nattu vaithiyam). And spends the entire amount to feed birds and animals. However, a small portion of it is used for his vehicle's petrol expenses.

It seems for the last 65 years he has been doing this service not missing even a single day. Whether rain or shine, he used to do this job daily without fail. And he reports that he had never met any type of hurdle whatsoever to execute this job on any day.

The aged person claims that he had been blessed by his good deeds in his previous births to do this noble job non-stop for 65 years and all the 365 days in each of those years.

The reporter concludes and says, "If you happen to meet this person, please greet him and get his blessings."

(THOUGH SPENDING RS.2,000 DAILY FOR FEEDING BIRDS AND ANIMALS SEEMS UNBELIEVABLE TO ME, I HAD JUST TRANSLATED THE SUBSTANCES OF THE ARTICLES  ....

FOR ALL OUR HCMS78 GUYS

FOR THOSE WHO CAN'T READ TAMIL

(AND ALSO FOR ALL MY ENGLISH LEARNERS ACROSS THE GLOBE)

Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer,
Salem, South India.

Tamil content Courtesy :

Murali.S.R. HCMS78

=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=

சேலத்தின் மகானோ...?? மகாசித்தரோ...?

விலங்குகளுக்கு உணவளிக்கவே பிறவி  எடுத்த மாமனிதர்.!

கேட்டார் பாருங்க ஒரு கேள்வி
கோடி பதில் உள்வைத்து.!

இன்று மதியம் சேலம் கலெக்டர் பங்களா பின்புறம் காவல் துறை DIG அலுவலகத்திற்கு சென்றிருந்தேன் காவல்துறையை சார்ந்த நண்பர் திரு.முருகனோடு பேசிக்ண்டி கொண்டு இருந்தேன். அப்போது அவர் எனக்கு வயதான முதியவர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார்.

அவரின் வயது 86.நாட்டு வைத்தியம் செய்வாராம் தன் சிறிய இரண்டு சக்கர வாகனத்தில் விதவிதமான பைகளில் பலவிதமான உணவுகளை மாட்டி வைத்திருந்தார். ஒவ்வொரு பையிலும்   உணவுகள் வைத்திருந்தார்.

அவர் ஓர் சப்தம் செய்தார் அந்த இடத்தில் பல தெரு நாய்கள் ஓடி வந்தன வரிசையாக அவைகளுக்கு இனிப்பு,காரம் என வித விதமாக விருந்து படைப்பது போல் கொடுத்தார்  பின் இட்லி, பழங்களை பிட்டு அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர்மீது வைத்தார். நான் எதற்காக அய்யா அங்கு வைக்கிறீர்கள் என்றேன். இப்ப பாருங்க அதைச் சாப்பிட வருவாங்க உங்களுக்கே புரியும் என்றார்.

சற்று நேரத்தில் அணில்கள் ஓடோடி வந்து உணவுகளை சாப்பிட்டது.பிறகு மற்றொரு இடத்தில் உணவுகளை வீசினார் பறவைகள் வந்து சாப்பிட்டது. மண்ணில் பொந்துகள் உள்ள இடத்தில் உணவுகளை வைத்தார் பெருக்கான் வந்து சாப்பிட்டது.

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது என் வாழ்நாளில் எலி வகை பெருக்கான்களுக்கு உணவு வைப்பதையும் அவைகளும் உடனே வந்து சாப்பிடுவதையும் இப்போது தான் பார்த்தேன். மீதம்  உள்ள உணவுகளை குரங்குகளுக்கு வைக்கிறார்.

தினமும் ரூ.2000/=க்கு உணவுகள் வாங்குகிறார்.

கலெக்டர் பங்களா, அஸ்தம்பட்டி, புதூர்,செட்டி சாவடி, கொண்டப்பநாய்கன் பட்டி, ஏற்காடு அடிவாரம் என்று சுமார் 20.கிலோமீட்டர் தூரம் தன்  சேவையை செய்கிறார்.

நான் அவரிடம் தங்களுக்கு வருமானம் ஏது ஐயா என்று கேட்டேன்.   நாட்டு வைத்தியம் பார்ப்பேன் தினமும் ரூ.  2000 கிடைக்கும். வண்டிக்கு பெட்ரோல் போட்டது போக மீதம் ஜீவன்களுக்குத்தான் உணவு வாங்கி அளிப்பேன் என்றார்.

எவ்வளவு காலமாக இதை செய்கிறீர்கள் என்றேன்.

சுமார் 65.வருடங்களாக செய்கிறேன் என்றார். உங்களுக்கு என்ன நன்மை இதனால் என்று கேட்டேன் சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்து நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு நீ பதில் சொல் என்றார்.

இந்த 65.ஆண்டுகாலமாக நான் செய்யும் இந்தப் பணியில்,ஒரு நாள் கூட எனக்கு உடல் நலம் குறைவு ஏற்பட்டதில்லை,எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை தொடர் மழை பொழிந்தாலும் எனக்கு தடை ஏற்பட்டதில்லை.

தர்மம் செய்ய எல்லோராலும்
முடியாது இதெல்லாம் பிறவி பயன் பிராப்தம் வேணும் தம்பி என்று முடித்தார்.!

65.ஆண்டு சேவை...???
தடை ஏதுமில்லை...???
100.பதில் மனதில் ஓடின.!!

இவரை சந்தித்தது மிகவும் பெருமையென மகிழ்கிறேன்

உறவுகளே...

சேலம் பகுதி உறவுகளே...
இவரைக் கண்டால் ஐந்துநிமிடம் பேசி, ஒரு வாழ்த்து கூறி ஆசி பெற்று  செல்லுங்கள்.

வாசித்த நெஞ்சங்களுக்கு
வணக்கம்.!

கண்ணால் கண்டதை காணிக்கை யாக்கியுள்ளேன்.
 
விரைவில் அந்த அற்புத மனிதருடன் ஒரு நாள் பயணிக்க உள்ளேன்.

நன்றி.!!!

Translated into English by
Ezhilarasan Venkatachalam

Comments

Popular posts from this blog

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

An old lady begs for money and then feeds crows and puppies using it by Venkatachalam Salem

நண்பரிடம், "அங்க பாருங்க" என அந்தப் பாட்டியைக் காட்டினேன். பாட்டியின் முகம் அப்போது மலர்ந்திருந்தது.  I showed the old lady to my friend, "Look at her." The old lady's face was bright then.  -- நான்கு நாய்க்குட்டிகள் அவரைச் சுற்றிச்சுற்றி வந்தன. ஒரு குட்டி அவருடைய மடியில் ஏறி நின்று அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தது.  Four puppies surrounded her. A puppy stood on her lap and looked up at her face.  "என்னடி பாக்கற?" என்று சிரித்துக் கொண்டே அதன் நெற்றியில் விரலால் அழுத்தினார்.  "Why are you looking at me?" she told smiling and pressed her finger on its forehead.   உடனே பிற குட்டிகளும் தம் முகங்களை அவரை நோக்கித் திருப்பின. ''என்னடி செல்லங்களா, உங்களுக்கும் வேணுமா?" என்றபடி பாட்டி எல்லாக் குட்டிகளின் நெற்றியிலும் அழுத்திவிட்டுச் சிரித்தார். Immediately the other puppies also turned their faces towards her. "What's the matter with you dears, do you want it too?". The old lady pressed her finger on the foreheads of all the...