Skip to main content

Movie Review TARAMANI translation Ezhilarasan English through TAMIL

Movie review - TARAMANI - Translation



FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION
திரை விமர்சனம்: தரமணி

சமூகத்தின் இருவேறு அடுக்குகளில் வாழும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எதிர்பாராமல் அரும்பி மலரும் காதலையும், அதனால் விளையும் உறவுச் சிக்கலையும் ‘உலகமயமாக்கல்’ எனும் பயாஸ்கோப் வழியாகச் சொல்வதுதான் ‘தரமணி’.

A young man and woman belonging to two different strata of the society accidentally meet and fall in love with each other. The problems they face after that is told with THE WORLD LIBERALIZATION PERSPECTIVE.

காதலிலும் பணத்திலும் ஏமாற்றப்பட்டு விரக்தியடைந்த இளைஞன் வசந்த் ரவி.

Vasanth Ravi is a depressed person who had been cheated both in love and cash dealings.

கணவனைப் பிரிந்து குழந்தையோடும், தன் தாயோடும் தனித்து வாழும் ஆங்கிலோ இந்தியப் பெண் ஆண்ட்ரியா.

 Andriya is an Anglo Indian lady who had split from her husband. She is living with her mother along with her child.

 இருவருக்கும் நட்பு மலர்ந்து காதலாகிறது. இணைந்து வாழ்கின்றனர்.   

Both become friends. Then it becomes love and they live together.

ஐ.டி. கம்பெனியில் 80 ஆயிரம் சம்பளம் வாங்கி, தன் வாழ்க்கையை தானே தீர்மானிக்கும் துணிச்சல் மிக்க பெண் ஆண்ட்ரியாவின் வாழ்க்கை முறையில் ஒன்ற முடியாமல் தவிக்கிறான் வசந்த்.

Vasanth struggles in fitting himself with Andriya who earns 80,000 in an IT company and who is bold enough to handle her life alone and make independent decisions.

நடத்தையில் சந்தேகம், சண்டையால் விரிசல் ஏற்பட்டுப் பிரிகிறார்கள்.

Andriya's husband suspects her and following a fight they split.

அதற்குப் பிறகு தவறான வழியில் தடம் மாறும் வசந்த், இறுதியில் திருந்தி காதலியை நோக்கித் திரும்புகிறானா?   
After that Vasanth takes a wrong path.  Did he return to his lover?

புதிய உறவால் ஆண்ட்ரியா எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?

What are the problems that Andriya had to face due to her new relationship?

அவனை அவள் ஏற்கிறாளா?
Does she accept him?

 இதை ‘மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி’ (இயக்குநர் ராம் படம் நெடுகிலும் அடிக்கடி சொல்வது போல) சொல்கிறது தரமணி.

The movie answers these questions by linking "THE NORTH POLE WITH THE SOUTH POLE"  This happens to be the repeated dialogue that the director Ram used to tell throughout the movie.

வழக்கமான காதல் கதை பாணியில் இருந்து விலகி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

The director had taken a new path in writing a love story.

 ஆண்ட்ரியா, வசந்த், சவும்யா தொடங்கி, சாலையில் அடிபட்டுக் கிடக்கும் பிழைக்கவந்த வடமாநில கட்டிடத் தொழிலாளி வரை, பெரும்பாலான கதாபாத்திரங்கள் உலகமயமாக்கலின் குழந்தைகள் என்று நம்ப வைத்துவிடுகிறார்.

He had made us to believe most of the characters in this movie are by products of the world liberation scheme. They are Andriya, Vasanth, Sowmiya and the North Indian construction employee who get injured on the road.

 உலகமயமாக்கல் உருவாக்கி வைத்திருக்கும் எண்ணற்ற சிக்கல்களை ஒரு காதல் கதைக்குள் ‘வாய்ஸ் ஓவர்’ மெசேஜ்களாக இயக்குநர் சொல்லிச் செல்லும்போது திரையரங்கில் கரவொலி, சிரிப்பொலியோடு ‘கமென்ட்களும்’ எழுகின்றன.

When the director tells in VOICE OVER STYLE, the  big list of problems that the world liberalisation had created in this love story, it is well received with laughter and comments from the viewers.

சுய சார்போடும் சுயமரியாதையோடும், அதே நேரத்தில் கனிவோடும் உயர்ந்து நிற்கிறது ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம்.

Andriya's character is majestic. It has self dependence, self respect and yet is very pleasing.

தோற்றம், உடல்மொழி, குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு என அனைத்திலும் பாத்திரத்தோடு கச்சிதமாகப் பொருந்துகிறார்.

She fits the character perfectly in appearance, body language, voice and the way she expresses her feelings etc.

ஆனாலும், இன்னும் எத்தனை காலம்தான் தறுதலை மன்னன்களை உருகி உருகிக் காதலிக்கும் பொறுப்பான பெண்களை நம் தமிழ் சினிமா காட்டப்போகிறதோ!

But I am fed up with the Tamil cinema that continues to show a responsible girl falling madly in love with a vagabond.

காதலனிடம் காதலி, ‘‘நீ எப்போது தான்டா வேலைக்குப் போவே?’’ என ஒரு தரம் கூட கேட்காவிட்டாலும், திரையரங்கில் பார்வையாளர்கள் கத்தி கூப்பாடு போடுகிறார்கள். 

Though the lover does not ask her man even once, "Hey man when are you going to get a job?" the viewers keep on asking it.

அதிகம் ஸ்டீரிரோ டைப் ஆண்களையே அவர் எதிர்கொள்வதாக காட்டியிருப்பது வலிந்து உருவாக்கப்பட்ட முரண். 

She happens to meet only stereo type men, this is a bit unbelievable.

முதல்பாதி முழுவதும் இயல்பான நடிப்பைத் தந்திருக்கும் வசந்த் ரவி, 2-ம் பாதியில் பின்தங்கிவிடுகிறார்.

Vasanth Ravi's acting is very natural in the first half. But the second half he is lagging behind.

தரமணி ரயில் நிலையக் காவலராக வரும் அழகம்பெருமாள், பிரபுவின் காதலி அஞ்சலி, காவல் ஆணையர் ஜேஎஸ்கே சதீஷ்குமார், அவரது மனைவி, ஆண்ட்ரியாவின் மகன் என துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் படத்துக்கு உயிரூட்டியிருக்கின்றனர்.

The Tharamani Railway Station Policeman, Azhagam Perumal, Prabhu's lover, Anjali, Police Commissioner, J.S.K.Sathish Kumar, his wife, Andriya's son ... all these characters had give life to story.

உலகமயமாக்கலினால் மனித மனம் வெற்றிடமாகிப் போனதை தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது.

Theni Eswar's photography had clearly portrayed that our heart had become empty following the world liberalisation.

பின்னணி இசையிலும், நிசப்தத்தை மிக கவனமாக முக்கிய காட்சிகளில் பொருத்திய விதத்திலும் அசத்தியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

Yuvan Shankar Raja had left silence play its part in his back ground music, it had an excellent effect in elevating the quality of critical scenes.

பாடல்கள் அடிக்கடி வந்தாலும் கதைப் போக்கின் விளைவையும், கதாபாத்திரங்களின் மன உணர்வையும் நமக்குக் கடத்திவிடுகின்றன மறைந்த நா.முத்துகுமாரின் பாடல் வரிகள்.

The songs of the late Muthu Kumar, though played frequently in the movie, quickly passes on to the viewers the exact feeling of the character.

தமிழ்த் திரைக்கு அவர் எத்தனை பெரிய இழப்பு என்பதை இந்தப் படமும் உணர்த்துகிறது!

This movie also high lighted that he is a big loss to the Tamil cinema industry.

நம் மனதில் தென்றல்போல வருடிப் பதியும் அழகம்பெருமாளின் மனைவி கதாபாத்திரத்தைச் சிதைத்தது வக்கிரத்தின் உச்சம்.

The character, the wife of Azhagam Perumal is like a breeze caressing our cheeks easily captures our heart. It is the peak of perversion to spoil that character.

 பெண் குடிப்பதை உரிமையாகக் கொண்டாடும் போஸ்டரும், படத்தில் ஆங்காங்கே இயக்குநர், ராமேஸ்வர கடலோடிகள் உயிர் பிழைக்கும் அரசியலையும், பணமதிப்பு நீக்க விவகாரத்தையும் ஒற்றை வரியில் ’வாய்ஸ் ஓவராக’ பேசிவிட்டால் நல்ல படம் ஆகிவிடுமா?

You can not call it a good movie if you just display posters depicting the right of women to drink and tell some important points in VOICE OVER ... like politics in the Rameswaram fishermen's survival, currency demonitation etc.

 ‘கற்றது தமிழ்’ என்றால் தான் வேலை கிடைக்காது, கற்றது ஆங்கிலம் என்றாலும் அப்படித்தானா ராம்?

Director Ram in your previous movie you portrayed that the hero was unemployed because he was a graduate in Tamil.  In this movie he is an English graduate, yet he too is unemployed. Why is it, Mr Ram?




நன்றி :

தி இந்து 13 Aug 2017

Translated by
Ezhilarasan Venkatachalam
Salem, South India

Source :

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19485164.ece
.. 

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...