ASK TINKU QUESTIONS more/collection
நண்பரே, கீழே உள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எனக்கு அனுப்புங்கள். நான் திருத்தி உங்களுக்கு மீண்டும் அனுப்புகிறேன்.
(கட்டணம் உண்டு)
101) மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் எடை அதிகரிக்குமா? அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால் பூமி என்னாகும் டிங்கு?
– வெ. லாவண்யா, 8-ம் வகுப்பு, தூய வளனார் பள்ளி, தஞ்சாவூர்.
ஒரு பொருளை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. உயிர்கள் இந்தப் பூமியிலிருந்தே தோன்றி, பூமியிலேயே மடிகின்றன. ஆக்கமும் அழிவும் தொடர்ந்துகொண்டிருப்பதால், ஏறக்குறைய சமன் ஆகிவிடும். இதனால் பூமியின் எடை அதிகரிக்காது லாவண்யா.
102) நான் வாள் பயிற்சி பெறுவதற்கு உதவுவாயா டிங்கு? – ப்ரியதர்ஷினி.
நீங்கள் எந்த மாநிலம், எந்த ஊர் என்றெல்லாம் குறிப்பிடாமல் மெயில் அனுப்பினால் நான் எப்படி உதவ முடியும் ப்ரியதர்ஷினி? கேள்வி கேட்பவர்கள் தங்கள் பெயர், வகுப்பு, பள்ளி, ஊர் போன்றவற்றைக் குறிப்பிட்டு அனுப்பினால் மட்டுமே பதிலளிக்க முடியும் நண்பர்களே!
103) பச்சோந்தியின் நாக்கில் பூச்சிகள் எப்படி ஒட்டிக்கொள்கின்றன டிங்கு?
– ஆர். கார்த்திகேயன், அருப்புக்கோட்டை.
பூச்சிகளை உணவாகச் சாப்பிடும் விலங்குகளுக்கு இயற்கையே ஒரு தகவமைப்பை வழங்கியிருக்கிறது. இவற்றின் நாக்குகள் பசைத் தன்மையுடன் காணப்படுகின்றன. பூச்சிகளைக் கண்டதும் நாக்கை நீட்டினால், அவை தப்பிச் செல்ல முடியாமல் ஒட்டிக்கொள்கின்றன. பச்சோந்தி மட்டுமில்லை, பல்லி, தவளை போன்றவற்றின் நாக்குகளிலும் பசை உண்டு கார்த்திகேயன்.
104) காந்தியடிகளிடம் உனக்குப் பிடித்த குணம் எது டிங்கு?
– எம். கல்பனா, ஆறாம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, குன்றத்தூர்.
எளிமை, அகிம்சை, கொள்கையில் உறுதி, சகிப்புத்தன்மை போன்ற பல விஷயங்கள் காந்தியிடம் எனக்குப் பிடிக்கும் கல்பனா. இன்று நம் நாடு காந்தியிடமிருந்து சகிப்புத்தன்மையைத்தான் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்.
105) நானும் காவ்யாவும் நெருங்கியத் தோழிகள். திடீரென்று எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது. அவள் மீதுதான் தவறு. ஆனாலும் இதுவரை என்னிடம் மன்னிப்பும் கேட்கவில்லை, பேசவும் இல்லை. தப்பு செய்தவளே இப்படியிருக்கும்போது நான் ஏன் பேச வேண்டும் என்று இருந்துவிட்டேன். ஆனால் என்னால் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. நான் என்ன செய்வது டிங்கு?
– வி. பத்மப்ரியா, ஈரோடு.
எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும் எப்போதாவது இப்படிக் கருத்து வேறுபாடுகள் வருவது இயல்புதான். இதை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதில்தானே உங்கள் நட்பின் சிறப்பு இருக்கிறது! அன்பானவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்துவிடலாம். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். கோபத்தில் பேசாமல் இருந்துவிட்டாலும் பரவாயில்லை. உங்கள் தோழியிடம் பேசாமல் இருப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறது அல்லவா? எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல், உடனே சென்று இயல்பாகப் பேசுங்கள். அவரும் பேசுவார்.
தன் செயலுக்கு வருத்தம்கூடத் தெரிவிப்பார். அப்படித் தெரிவிக்காவிட்டாலும் உங்கள் மீதுள்ள அன்பும் மதிப்பும் அவர் மனதில் அதிகமாகும். நட்பு இன்னும் ஆழமாகும். உங்கள் நட்பில் நல்ல விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இதுபோன்ற சண்டைகளை மறந்துவிடுங்கள். நீண்ட காலம் உங்கள் நட்பு நிலைத்திருக்க வாழ்த்துகள் பத்மப்ரியா.
நன்றி :
தி இந்து := டிங்குவிடம் கேளுங்கள்.
12 Jul 2017
106) ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் பார்த்தேன். அதில் வருவதுபோல் ஓர் எரிகல் இந்தியாவைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா, டிங்கு? நான் விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்று ஆசை. இது சரியா?
– ஷைனி, 8-ம் வகுப்பு, வேலம்மாள் வித்யாஷ்ரம், படப்பை.
எரிகல் அல்லது விண்கற்கள் சூரிய மண்டலத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவை சில நேரம் பூமியின் ஈர்ப்புப் பகுதிக்குள் நுழைந்துவிடுவது உண்டு. அப்படி நுழையும் எரிகற்கள் பெரும்பாலும் கடலில்தான் விழுந்திருக்கின்றன. அரிசோனாவில் மிகப் பெரிய பள்ளம் ஒன்று எரிகல் விழுந்ததால் உண்டாகியிருக்கிறது. இதுவரை எரிகற்களால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதில்லை. அதனால் பயப்படாமல் இருங்கள், ஷைனி.
யார் வேண்டுமானாலும் என்னவாக வேண்டுமானாலும் வருவதற்கு ஆசைப்படலாம். இதில் என்ன தவறு இருக்கிறது? நிறையப் படிக்க வேண்டும். ஆர்வத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும், அவ்வளவுதான். 2033-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை நாசா அனுப்ப இருக்கிறது. இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிகளை முடித்து, முதல் பாஸ்போர்ட்டைப் பெற்றவர் அமெரிக்காவில் வசிக்கும் ஆலிஸா கார்சன்.
17 வயதான இவர், செவ்வாயில் கால் பதிக்கப் போகும் முதல் மனிதர். கார்ட்டூன் தொடர்களைப் பார்த்து, 3 வயதிலேயே செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல ஆசைப்பட்டிருக்கிறார். வளர வளர விண்வெளித் துறையைப் பற்றி அறிந்துகொண்டார். 12 வயதிலேயே விண்வெளி தொடர்பான பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார். இன்று செவ்வாய் கிரகத்துக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்!
107) விலை உயர்ந்த நாகரத்தினக் கற்களைப் பாம்பு கக்கும் என்கிறார்களே, உண்மையா டிங்கு?
– எம். ஜோதி, 8-ம் வகுப்பு, அரசினர் பள்ளி, திருப்பத்தூர்.
நானும் இதுபோன்ற விஷயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பாம்பு, தான் சாப்பிட்டை இரை ஜீரணிக்காவிட்டால் அப்படியே கக்கிவிடும். ஆனால் நாகரத்தினக் கற்களைக் கக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டுக்கதை, ஜோதி. பாம்பு கடிக்கும்போதுதான் நச்சுப் பற்களில் இருந்து நச்சு சுரக்கும். அதுவும் சில துளி விஷம்தான் வெளிவரும். நச்சு, பாம்பின் உடலுக்குள் கெட்டியாவது இல்லை.
108) குறிஞ்சி மலர் ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது, டிங்கு?
-அ. சுபிக்ஷா, ஒன்பதாம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்.
குறிஞ்சி மலர் ஆசியாவில் மட்டுமே காணப்படும் செடி இனம். இந்தியாவில் சுமார் 50 வகை குறிஞ்சிச் செடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. Strobilanthes kunthiana என்ற இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூக்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. 7, 12, 16, 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி வகைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே குறிஞ்சிச் செடிகள் பூக்கின்றன. உயிர் தப்பிப் பிழைப்பதற்கான வழியாக இவ்வாறு நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
குறிஞ்சிப் பூக்களில் இருக்கும் பூந்தேன் மிகவும் சுவையானது. பூக்களை நாடி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஏராளமாக வருகின்றன. அதனால் அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கு இந்தத் தகவமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு விதைகளை மண்ணில் விட்டுவிட்டு, செடிகள் மடிந்துவிடுகின்றன. மீண்டும் விதைகளில் இருந்து புதுச் செடிகள் உருவாகி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பூக்கின்றன. பூக்கக்கூடிய காலண்டர் அதன் மரபணுவிலேயே அமைந்திருப்பதால், அவை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன, சுபிக்ஷா. தற்போது கேரளாவில் உள்ள மூணாறு மலையில் நீலக்குறிஞ்சி பூத்திருக்கிறது.
109) ஒரு பொருளைப் பார்த்ததும் அது எப்படி வேலை செய்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறேன். தேவையற்ற பொருட்களை வைத்து, இரண்டு கருவிகளை உருவாக்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள், ‘நீ பெரிய எடிசனா?’ என்று கிண்டல் செய்கிறார்கள். என்ன செய்வது, டிங்கு?
– எம். பரகத் அலி, காங்கேயம்.
உங்களது ஆராய்ச்சி ஆர்வத்துக்குப் பாராட்டுகள், பரகத் அலி! ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய எடிசன், சிறுவனாக இருந்தபோது ஒருநாள் கோழி முட்டையின் மீது அமர்ந்திருந்தார். அவரது அம்மா எதற்காக இப்படி உட்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டார். கோழி அடைகாத்தால் குஞ்சு பொரிகிறதே, அதேபோல நானும் முட்டையை அடைகாத்தால் குஞ்சு பொரியுமா என்று பார்க்கிறேன் என்றார். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர். ஆனால் எதிர்காலத்தில் உலகம் போற்றும் விஞ்ஞானியாக மாறினார் எடிசன். அதனால் இதுபோன்ற கிண்டலுக்காக ஆர்வத்தை விட்டுவிடாதீர்கள். வீட்டில் உள்ளவர்கள் பிற்காலத்தில் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.
நன்றி :
தி இந்து := டிங்குவிடம் கேளுங்கள்.
18 Jul 2018
110)
சொடக்கு ஏன் வருகிறது? அதைப் போடுவது நல்லது என்கிறார்களே உண்மையா, டிங்கு?
– எம். கார்த்திக், காரைக்குடி.
எலும்புகளுக்கு இடையே திரவம் (Synovial fluid) இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்தத் திரவம் குறையும்போது இடைவெளி உருவாகிறது. அப்போது எலும்புகளை அசைக்கும்போது சத்தம் உண்டாகிறது. இதைத்தான் சொடக்கு என்கிறோம். சொடக்குப் போடுவதால் நன்மை ஒன்றும் இல்லை, கார்த்திக்.
111)
எங்கள் வீட்டுக்குத் தினமும் இரண்டு குருவிகள் வருகின்றன. ஆனால் என்னைப் பார்த்தாலே பயந்து, பறந்துவிடுகின்றன. ஏன், டிங்கு?
–பா. கா. நம்ரதா, 8-ம் வகுப்பு, கேம்பிரிட்ஜ் பப்ளிக் இ – பள்ளி, கிருஷ்ணகிரி.
புறா, காகம், கோழி, வாத்து போன்ற பறவைகள் மனிதர்களுடன் நீண்ட காலமாகப் பழகி வருகின்றன. அதனால் அவை மனிதர்களைக் கண்டு அச்சம் அடைவதில்லை. ஆனால், குருவிகள் மனிதர்களுடன் நெருங்கிப் பழகுவதில்லை. மிகவும் கூச்ச சுபாவம் உடைய பறவைகள். அதனால்தான் வீட்டுக்கு வந்தாலும் மனிதர்களைக் கண்டவுடன் பயத்தில் பறந்துவிடுகின்றன, நம்ரதா.
112)
ஒரே மாதிரி ஏழு மனிதர்கள் உலகத்தில் இருப்பார்கள் என்று சொல்கிறார்களே, அது உண்மையா டிங்கு?
–பா. சுபஸ்ரீ, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.
உடன்பிறந்தவர்களில், உறவினர்களில் ஒருவரின் சாயலில் இன்னொருவர் இருக்கலாம். ஆனால் ஒருவரைப்போல் அச்சு அசலாக இன்னொருவர் இருக்க வாய்ப்பில்லை. ஒருவரின் கை ரேகைபோல் இன்னொருவரின் கை ரேகைக் கூட இருப்பதில்லை. பிறகு எப்படி ஒரே மாதிரி ஏழு பேர் இருக்க முடியும், சுபஸ்ரீ?
113)
துப்பறியும் கதைகள் உனக்குப் பிடிக்குமா, டிங்கு?
–சி. பிரணவ், சேலம்.
துப்பறியும் கதைகள் ஒரு புதிரை விடுவிப்பதுபோல் மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் பிடிக்கும், பிரணவ். ஷெர்லாக் ஹோம்ஸ், துப்பறியும் சாம்பு கதைகளையும் படித்திருக்கிறேன். ஆனால் எனக்கு மிகவும் பிடித்த துப்பறியும் கதைகள் என்றால் அது சத்யஜித் ரே எழுதிய ‘ஃபெலுடா’ வரிசைக் கதைகள்தான். நீங்களும் படித்துப் பாருங்கள் .
நன்றி :
தி இந்து := டிங்குவிடம் கேளுங்கள்.
04 Jul 2018
114) விலங்குகளுக்கு ஏன் வியர்ப்பதில்லை, டிங்கு?
– எஸ். ஹரிஹரசுதன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி.
விலங்குகளுக்கு வியர்ப்பதில்லை என்று சொல்லிவிட முடியாது, ஹரிஹரசுதன். பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். தங்கள் உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ளக்கூடிய தகவமைப்பைப் பெற்றுள்ளன. வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்து, வியர்வையை வெளியேற்றி, வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்ளும். பாலூட்டிகளில் நாய், பூனை, யானை, வெளவால், குரங்குகள் போன்றவை எக்கிரின் அல்லது அபோகிரின் அல்லது இரண்டு சுரப்பிகளையும் சேர்த்துப் பெற்றுள்ளன.
எக்கிரின் சுரப்பிகள் (Eccrine glands) உடல் முழுவதும் இருக்கக்கூடியவை. மனிதர், வால் இல்லாக் குரங்குகள் போன்றவை எக்கிரின் சுரப்பிகளைப் பெற்றுள்ளன. வால் இல்லாக் குரங்குகளில் முடிகளால் மூடப்பட்ட கொரில்லாக்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் அக்குள், உள்ளங்கைகள், கால் பாதங்கள் போன்றவற்றில் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. நாய்களும் பூனைகளும் அபோகிரின் சுரப்பிகளைப் (Apocrine Glands) பெற்றுள்ளன. இவை பாதங்களில் இருக்கும். நாய்களுக்கு இந்தச் சுரப்பிகள் மிகக் குறைவாக இருப்பதால், கோடைக் காலத்தில் நாக்கின் மூலம் நீரை வெளியேற்றி, சுவாசப் பாதையை ஈரமாக வைத்துக்கொண்டு, உடலின் வெப்பத்தைச் சீராக வைத்துக்கொள்கின்றன.
பன்றி, காண்டாமிருகம், நீர்யானை போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகளாக இருந்தாலும் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை. அதனால்தான் பெரும்பாலான நேரம் தண்ணீரிலும் சகதியிலும் உடலை அமிழ்த்தி, உடலின் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கின்றன.
115) மாணவர்களாகிய நாங்கள் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன, டிங்கு?
- ஆர். அம்ருதாஸ்ரீ, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
உங்களைப் போன்று மாணவர் பருவத்தில் மிகவும் பயந்தவராகவும் கூச்ச சுபாவம் கொண்டவராகவும் அவர் இருந்தார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய பிறகுகூட, நீதிமன்றத்தில் அவரால் வாதிட இயலவில்லை. இதே காந்தி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பிய பிறகு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தனித்தனியாகப் போராடிக் கொண்டிருந்த மக்களை ஒருங்கிணைத்தார். அந்த ஒற்றுமையின் பலம் ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்து, நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. அச்சம், கூச்சம் போன்றவற்றை நாம் கைவிட்டு, நம்மாலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட முடியும் என்று காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
எந்தச் சூழ்நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். உடை, உணவு என்று எல்லாவற்றிலும் எளிமையாக வாழ்ந்தவரிடமிருந்து அந்த எளிமையைக் கற்றுக்கொள்ளலாம். வன்முறைகள் இல்லாத அறவழிப் போராட்டங்கள் மூலம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக அகிம்சையைக் கற்றுக்கொள்ளலாம், அம்ருதா.
116) நான் முதல் குழந்தை என்பதால் இடி இடிக்கும்போது ‘அர்ஜூனன் பேர் பத்து’ என்று பாட்டி சொல்லச் சொல்கிறார். அப்படிச் சொன்னால் என் மீது இடி விழாது என்கிறார். இது உண்மையா, டிங்கு?
–டி. கல்யாண் குமார், முதுகுளத்தூர்.
இடி இடிக்கும்போது வெட்ட வெளியில் நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று நின்றுகொள்ள வேண்டும். முக்கியமாக மரத்தடியில் நிற்கக் கூடாது. இடி மரத்தில் இறங்கினால் தீப்பற்றிக்கொள்ளும். இடி தாக்கினால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடலாம். அதனால் ‘அர்ஜூனன் பேர் பத்து’ இல்லை, ’அர்ஜூனன் பேர் நூறு’ என்று சொன்னால்கூட இடியிடம் இருந்து தப்பிக்க முடியாது. அந்தக் காலத்தில் இடியைக் கண்டு பயந்திருப்பார்கள். அந்தப் பயத்தைக் குறைத்து, கவனத்தைத் திசை திருப்புவதற்காக இப்படிச் சொல்லச் சொல்லியிருக்கலாம், கல்யாண் குமார்.
நன்றி :
தி இந்து := டிங்குவிடம் கேளுங்கள்.
11 Jul 2018
********CHARGES APPLY ********
ENGLISH TRAINING THROUGH TRANSLATION
Friends, Learn WRITTEN ENGLISH easy way. Translate any article given below and send to me in whatsapp or email.
I am ready to help you write English without grammar mistakes. Are you ready?
Please translate any article from the matter below from TAMIL to English and send to me in WHATSAPP
** Charges apply **
** SEE CHARGES DETAILS BELOW **
Ezhilarasan Venkatachalam
Salem
=॥=॥=॥=
நண்பர்களே, எளிய வழியில் ஆங்கிலத்தை இலக்கண பிழையின்றி எழுத கற்றுக்கொள்ளுங்கள்.
இதற்கு நான் உங்களுக்கு உதவ தயார்.
கீழே உள்ள சுவையாக சிறு பத்திகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து எனக்கு. வாட்ஸ்அப் அல்லது ஈ மெயில் மூலம் அனுப்புங்கள். // கட்டுரையில் இருக்கும் இலக்கண பிழைகளை கண்டு பிடித்தது திருத்தங்கள் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன.
இதற்கு கட்டணம் உண்டு
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில ஆசிரியர், சேலம்
Collected by
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem, South India.
(கட்டணம் உண்டு)
..

THIS IS ONLY FOR
EDUCATIONAL PURPOSES
Collected by
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem, South India.
Comments
Post a Comment