LINES WITH FUN AND PUN TRANSLATION VENKATACHALAM SALEM
Translation of "Poetic Lines" with pun
எனக்குப்பிடித்த கவிதைகள் (1 - 16):
..
1. "ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது....
எடை குறைவாக...!"
...... A baby was born to the ration shop worker.... Of course, it was UNDER WEIGHT.
2. "வராந்தாவிலேயே இருந்த
வயதான தந்தை....
இறந்த பின் ஹாலுக்குள் வந்தார்
புகைப்படமாய்...!"
..... My old father who was always in the verandah. Now entered the hall of my house "AS A PHOTOGRAPH".
3. “வீட்டின் பெயரோ அன்னை இல்லம்..!
அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்..!”
...... Name of the house is "MOTHER'S HOME".
But my mother is now in the "OLD AGE HOME."
4. " புறாக்கள் வளர்க்கும் எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை...."
- நா. முத்துக்குமார்.
......... The neighbour who is rearing PIGEONS had taken away my right to rear CATS in my home.
5. " பறித்த மலரை ஆண்டவனுக்குச் சூட்டினாலென்ன? கல்லறையில் வைத்தாலென்ன?
மலருக்கென்னவோ பறித்ததுமே வந்துவிட்டது மரணம் ! "
...... Whether you place the flower in front of God or in a tomb in the grave yard, the flower is DEAD the moment you plucked it from the plant.
6. “சர்க்கரை இல்லை...கொழுப்பு இல்லை...
எஜமானரோடு வாக்கிங் போகுது ஜிம்மி.!”
....... Jimmy has no complaints ... "No Sugar, No Cholestrol" yet it is accompanying his master in his walking.
7. "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே...!
வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வாய்...?" -- அப்துல் ரகுமான்.
.........Hey Gardner, you had chopped off the BRANCHES of my tree that spread its branches over the fence.
What are you going to do to the ROOTS that it had spread underneath the fence?
9. "சிரசாசனம் செய்யும் எழுதுகோலால் சிம்மாசனம் பெறுவான் எழுத்தாளன்"
~விஜயகிருஷ்ணன்
....... The writing instrument is STANDING UPSIDE DOWN hoping to soon enable the writer to get a STANDING OVATION..
14. "காற்றில் பறந்து பறவை மறைந்த பிறகும கிளை தொடங்கிய நடனம் முடியவில்லை !"
- நா. முத்துக்குமார்.
....... The bird flew off from the branch and disappeared into the sky. But the branch is yet to stop its dance.
16. "மொட்டைப் பனைமரமென வெட்டித் தொலைக்காதீர் அது ஒற்றைக் குருவியின் சிம்மாசனம்". ~ விஜயகிருஷ்ணன்
....... Dont TONSURE the palmyra tree. It is a majestic and SURE place for the sparrows to take rest.
தமிழ் வரிகளில் தொகுப்பை தந்து
உதவியது : செந்தில் மெடிக்கல்ஸ், சேலம் 2.
Translated
by
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem
Comments
Post a Comment