Skip to main content

TRANSLATION SHOULD WE CONTINUE CELEBRATING NEW YEAR AT zero HOURS Venkatachalam Salem

HAPPY NEW YEAR
AT ZERO ZERO HOURS
.
Friends,

SHOULD WE CONTINUE CELEBRATING NEW YEAR AT zero HOURS SPOILING OUR HEALTH? Why don't we celebrate the New Year 2020, from 5.45am with birds chirping?

நண்பரே,

நாம் 2020 ஆங்கில புத்தாண்டை 00:00 நடுராத்திரியில் கொண்டாடாமல், ஏன் இயற்கையோடும் சேர்ந்து அதிகாலை 5.45 மணிக்கு  கொண்டாட கூடாது ?

For millions of years, our human body got adapted to many things. For millions of years we woke up when the sun  came up and slept when the sun set.

மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, நம் மனித உடல் பல விஷயங்களுக்கு ஏற்றதாக தன்னையே அது மாற்றி அமைத்துக் கொண்டது. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக நாம் சூரியன் உதித்ததும், விழித்தோம்,  சூரியன் மறைந்ததும் தூங்கினோம்.

But when Thomas Alva Edison invented the electric bulb, everything stared to change. Then we had UPS or battery power based supply to work round the clock.

ஆனால் தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கைக் கண்டுபிடித்தபோது, ​​அனைத்தும் மாறி விட்டது. 
பிறகு 24 மணி நேரமும் வேலை செய்ய நாம் யு.பி.எஸ். அல்லது பேட்டரி சக்தி அடிப்படையிலான மின்சாரத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டோம்.

With the advent of television we started to  cut short our sleeping time and watched TV at night. Then followed the computers and internet to spoil our sleep.

தொலைக்காட்சியின் வருகையால் நாம் தூங்கும் நேரத்தை குறைக்க ஆரம்பித்தோம். இரவில் டி.வி. பார்த்தோம். மேலும் நம் தூக்கத்தை கெடுக்க கணினிகள் மற்றும் இணையம் வந்தது.
 
Of course punctuality is really important. For rocket launching even a micro second is important. But do we follow such accuracy in our day to day life? In attending our office? Do we keep up your appointments to the minute? Then why fuss for New Year alone?

நிச்சயமாக நேரம் தவறாமை மிகவும் முக்கியமானது தான். ராக்கெட் ஏவுவதற்கு ஒரு மைக்ரோ வினாடி கூட முக்கியம் தான். ஆனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இத்தகைய துல்லியத்தை நாம் பின்பற்றுகிறோமா? தினமும் உங்கள் அலுவலகத்திற்கு

செல்வதில், உங்கள் சந்திப்புகளை நிமிடம் தவறாமல் செய்கிறீர்களா?
பிறகு ஏன் புத்தாண்டுக்கு மட்டும் துல்லியத்தை நாம் பின்பற்ற வேண்டும் ?

Each minute is money for the transport department. Of course, they should be punctual.
Therefore we should agree when the government says that in aerodromes, railway stations and bus stands  the day starts at 00:00 hours.

போக்குவரத்து துறைக்கு
ஒவ்வொரு நிமிடமும் பணம் தான். நிச்சயமாக, அவை சரியான நேரத்தில் இயங்கியாக வேண்டும். ஆகையால், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் 00:00 மணி நேரத்தில் ஒரு நாளை தொடங்க வேண்டும் என்று அரசாங்கம் கூறும்போது நாம் ஒப்புக் கொள்ள தான் வேண்டும்.

But personally I want to synchronize with nature.  In my house, the day breaks for my love birds around 5.45am (in December).

ஆனால் தனிப்பட்ட முறையில் நான் இயற்கையுடன் ஒத்து போக விரும்புகிறேன். என் வீட்டில், அதிகாலை 5.45 மணியளவில் தான் (டிசம்பரில்) என் செல்லக் கிளிகளுக்கு ஒரு புதிய நாள் பிறக்கிறது.

I too want to synchronize with nature. Let everybody celebrate their New Year 2020 at 00:00 hours. It is okay for me to wake up with my love birds at 5.45am even on January 1st.
 
DO YOU AGREE?

Ezhilarasan Venkatachalam Salem

நானும் இயற்கையுடன் ஒத்து போக விரும்புகிறேன். 
 விருப்பம் உள்ளவர்கள் தங்கள் புத்தாண்டு 2020 ஐ 00:00 மணி நேரத்தில் கொண்டாடட்டும். எனக்கு அது ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 5.45 மணிக்கு தான் நான் புத்தாண்டைக் கொண்டாடுவேன்.

என்ன நண்பரே நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

எழிலரசன் வெங்கடாசலம் சேலம்.
தமிழ் வழி சிறப்பு ஆங்கில பயிற்சியாளர்.


Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. அறிமுகம் -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி —  பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு --என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. =_=_=_=_=_=_=_=_=_=_=_=_ Introduction  :  Friends, Tamil poet Barathiyar's poems will ignite our minds and fill our hearts with tons of self confidence. It was my long time wish to translate some of them. Here is my translation of " thaedi sooru nitham thindru "  as best as I could do. ................................................. // Thaedi choru nitham thindru  Translation Venkatachalam Salem Barathiyar song ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம்

Translation sandwich -- MY ROAD ACCIDENT AND HOW MS.SHIVANI GUPTHA INSPIRED ME

My road accident and how Ms. Shivani gupta inspired me என் சாலை விபத்தும் ஷிவானி குப்தா எனக்கு கொடுத்த பெரிய ஊக்கமும். -- -- .. ONLINE ENGLISH CLASSES   through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி ..  I am indebted to Ms. Shivani Guptha, a wheelchair confined lady, who gave new energy to my life in May 2007. /  ஒரு சக்கர நாற்காலியுடன் தன் வாழ்க்கையை கழிக்கும் ஷிவானி குப்தா, மே 2007~இல் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளேன். Friends, On 12th April 2007 at 9.30 pm I met with a road accident. I had two fractures, one on my right leg and another on my right hand . /  நண்பர்களே, ஏப்ரல் 12 ஆம் தேதி 2007 அன்று இரவு  9.30 மணியளவில் நான் ஒரு சாலை விபத்தை சந்தித்தேன். அதில் எனக்கு இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. என் வலது காலில் ஒன்று, என் வலது கையில் மற்றொன்று. I have a six inch steel or alloy implant in my right thigh even today. I was lucky enough to get immediate medical attention./ பிறகு என் வலது தொடையில் ஒரு ஆறு அங்குல எஃகு அல்லது "