Skip to main content

LADIES WERE SAFE IN MARINA AGITATION EZHILARASAN TRANSLATION ENGLISH THROUGH TAMIL

FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN.
The dreams of Gandhiji got materialized on the Marina Beach.

காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..!!

பெங்களூருவில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடந்த சமயம் அது. இருட்டாக இருக்கிறது. பக்கத்தில் ஒரு பெண்  இருக்கிறாள். இதை விட வேறு என்ன சந்தர்பம் வேண்டும் என பாய்ந்தது ஒரு கூட்டம்.

In Bangalore it was New Year eve  and celebration time. This incident happened during that time. It is dark, there is woman nearby. It was seen as an opportunity. And a crowd targetted the women to misbehave.

அங்கிருந்த சி.சி.டி.வியில்  பதிவான காட்சிகள் நாடு முழுவதும் பரவியதில் பெங்களூருக்கு கெட்ட பெயர்.

The video footage recorded on the nearby CCTV about the incident was telecast in all the TV CHANNELS across rhe country. And  following this Bangalore earned a bad name.

பெங்களூரு மட்டுமல்ல...
Not only Bangalore...

தலைநகர் டெல்லியில் பெண்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுவதில் டெல்லிக்கு இரண்டாவது இடம்.

We need not mention about the plight of the women folk in our national capital, Delhi. It is "ranked"  second in the list for cities were crime against women is rampant.

 பொருளதாரத் தலைநகர் மும்பையிலும் பெண்களின் நிலை மோசம்தான்.

Even in the commercial capital, Mumbai, women's plight is very bad.

ஆனால், சென்னை அப்படி அல்ல என்பதை நிரூபித்துள்ளது மெரினா கடற்கரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போராட்டம்.

But the agitation at Marina beach had proved that Chennai is different.

அண்மையில் இந்திய தேசிய குற்றவியல் பாதுகாப்பு ஆவணத்தின்படி, ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி, இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் ...

Recently the Indian National Crime and Safety Report was released.

கோவை நகரம் முதலிடம் பிடித்திருந்தது.

According to that report, Coimbatore is the best city for ladies to live peacefully.

இரண்டாவது இடத்தை சென்னை பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் திருச்சி ~க்கு  ஐந்தாவது இடம் கிடைத்தது.

And Chennai got second place.
And Trichy got fifth place.

பெண்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படும் டாப் -10 நகரங்களின் பட்டியலில், 3 தமிழக நகரங்கள் இடம்பெற்றிருந்தன.

The first 3  cities considered the safest in India are located in Tamilnadu.

பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில், முதல் பத்து இடத்தில் ஒரு தமிழக நகரம் கூட  இடம் பெறவில்லை.

And in the list of the worst cities for women, no city in Tamilnadu is present.

ஆக, பெண்கள் பாதுகாப்பாக வசிக்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
இது  ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலும் எதிரொலித்தது.

So, we come to understand that Tamilnadu is a very safe place for women. And this point also proved in the jallikattu agitation.

தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் எழுச்சியுடன் போராடி வருகின்றனர்.

Presently the youngsters are eagerly staging an agitation favouring JALLIKATTU.

சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நேற்று இரவு போராட்டத்தில் குதித்தனர்.

Yesterday night thousands of youngsters plunged in the agitation.

பகலில்  2 ஆயிரம் பேர் பங்கேற்ற கூட்டம்,  இரவில் இன்னும் அதிகமானது.

While the strength of the crowd in the daytime was 2,000, in the night it increased.

நேற்றிரவு மட்டும்   5ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளைஞிகள் மெரினாவில் திரண்டனர்.

Yesterday alone, more than 5,000 boys and girls assembled at Marina.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிக நேர்த்தியாக ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொண்டனர்.

The persons who participated in it, behaved very perfectly and decently.

எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடக்க  இடம் கொடுக்கவில்லை.

There was no untowards incidents at all.

பெண்களை , குழந்தைகளை கண்ணியத்துடன் அரவணைத்துப் பாதுகாத்தனர் இளைஞர்கள்.

The younsters protected the women and children with dignity and reverence.

ஆனால், போராட்டத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய அரசு விளக்குகளை அணைத்து இருளை ஏற்படுத்தியது.

But the government which is supposed to protect them, switched off the lights and turned the place dark.

ஜாமர்கள் வைத்து சிக்னல்கள் கிடைக்காமல் தடை செய்தது.

It kept jammers to inactivate the mobile phones.

இதனால் கூட்டம் கலைந்து விடும். பெண்கள் மிரண்டு போவார்கள் என்பது அதிகாரிகளின் எதிர்பார்ப்பு.

The police thought that the crowd will disperse following this. And the women will get scared.

சொல்லப்போனால் ஜல்லிக்கட்டு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரே ஒரு பெண்தான் என்பதையும்  இங்கே அரசு மறந்து விட்டது போலும்.

In fact, the government had forgotten the fact that the leader of the agitating group itself is a women.

விளக்கை அணைத்ததும் அனைவர்கையில் இருந்தும் செல்போன்களில் இருந்து வெளிச்சம் பாய்ந்தது.

The moment the lights went off,
lights started coming from everybody's mobile phones.

பெங்களூரு போல இருள் கிடைத்ததும் பெண்கள் மீது பாயவில்லை. மாறாக கைகள் மேலே உயர்ந்து பெண்களுக்கு வெளிச்சம் அளித்தது.  அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தது.

Like in Bangalore, nobody jumped on the ladies once it became dark. Alternatively, raised hands gave lights to the women. And they ensured their safety.

ஆனால் சட்டத்தைப் பாதுகாக்காக வேணடிய அதிகாரிகள், பெண்கள் பாதுகாப்புக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டிய காவல் துறையினர் மெரினாவின் விளக்குகளை.அணைத்தனர்.

But the government officials who are supposed to protect the ladies and ensure their safety, switched off the lights.

கூட்டத்தினுள் ஏராளமான பெண்களும் இருந்தனர். குழந்தைகளும் இருந்தனர். மெரினாவில் என்ன நடந்தது.?

There were many women and children in the crowd. But what happened at Marina?

ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மத்தியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை உணர முடிந்தது.

Even in the midst of thousands of men folk, the women can realize their complete safety.

மூவாயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட நாகரிகத்தின் வழி வந்த சமூகம் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர் தமிழக இளைஞர்கள்.

Our Tamil youngsters proved that they had come from an excellent culture  and tradition that is 3,000 years old.

100 ஆண்களுக்கு  மத்தியில் ஒரு பெண் சிரித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது சென்னை மெரினா!

Marina showed to the world that even among the midst of 100 male members, a women can be laughing with them.
...................oooooooo...............
Tamil source:(unknown)

Translated
by
Ezhilarasan Venkatachalam
e3 institute, salem

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. அறிமுகம் -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி —  பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு --என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. =_=_=_=_=_=_=_=_=_=_=_=_ Introduction  :  Friends, Tamil poet Barathiyar's poems will ignite our minds and fill our hearts with tons of self confidence. It was my long time wish to translate some of them. Here is my translation of " thaedi sooru nitham thindru "  as best as I could do. ................................................. // Thaedi choru nitham thindru  Translation Venkatachalam Salem Barathiyar song ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம்

Translation sandwich -- MY ROAD ACCIDENT AND HOW MS.SHIVANI GUPTHA INSPIRED ME

My road accident and how Ms. Shivani gupta inspired me என் சாலை விபத்தும் ஷிவானி குப்தா எனக்கு கொடுத்த பெரிய ஊக்கமும். -- -- .. ONLINE ENGLISH CLASSES   through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி ..  I am indebted to Ms. Shivani Guptha, a wheelchair confined lady, who gave new energy to my life in May 2007. /  ஒரு சக்கர நாற்காலியுடன் தன் வாழ்க்கையை கழிக்கும் ஷிவானி குப்தா, மே 2007~இல் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளேன். Friends, On 12th April 2007 at 9.30 pm I met with a road accident. I had two fractures, one on my right leg and another on my right hand . /  நண்பர்களே, ஏப்ரல் 12 ஆம் தேதி 2007 அன்று இரவு  9.30 மணியளவில் நான் ஒரு சாலை விபத்தை சந்தித்தேன். அதில் எனக்கு இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. என் வலது காலில் ஒன்று, என் வலது கையில் மற்றொன்று. I have a six inch steel or alloy implant in my right thigh even today. I was lucky enough to get immediate medical attention./ பிறகு என் வலது தொடையில் ஒரு ஆறு அங்குல எஃகு அல்லது "