Skip to main content

Benjamin David swims to office daily // English training through Tamil translation Ezhilarasan

Benjamin David swims to office daily

நதியில் படகு விட்டால் பலருக்கும் உதவுமே!

If boat transportation is started across the river, it will help many people.

ஜெர்மனியின் முனிச் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.

Munich, Germany is a city that is suffering from traffic congestion.

 காலையில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வது மிகவும் கடினமான விஷயம்.

It is a very tough job to go from one place to another.

40 வயது பெஞ்சமின் டேவிட், இதற்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தார்.

Forty year old Benjamin David found out a solution for this.

 தினமும் இசார் நதியில் 2 கி.மீ. தூரம் நீந்தி, தான் வேலை செய்யும் அலுவலகத்தை அடைந்துவிடுகிறார்.

Daily he swims 2kms. across the ISSAR river and reaches his office.

 “நானும் ரயிலில், பேருந்தில், சைக்கிளில் என்று பலவற்றிலும் பயணம் செய்து பார்த்தேன்.

"I have tried all other transportation methods like train, bus and cycle.

 எவ்வளவு சீக்கிரமாகக் கிளம்பினாலும் தாமதமாகத்தான் அலுவலகம் செல்ல முடிந்தது.
In spite of starting  at the earliest possible time, I always reached my office late.

 அப்போதுதான் நதியில் நீந்திச் செல்லும் முடிவை எடுத்தேன்.

Only then, I decided to swim across the river.

 என் வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல நதியில் இரண்டு கி.மீ. தூரம்தான்.

My office is just 2kms from my house, if I swim across the river.

தண்ணீர்ப் புகாத பையில் உடை, உணவு போன்றவற்றை எடுத்துக்கொண்டு நீந்துவேன்.

I will carry my food and dress in a waterproof bag and swim.

 கரையேறி, உடை மாற்றி குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலகம் சென்றுவிடுவேன்.

After I reach the other side, I will change my dress and reach my office in time.

இப்படி நீந்திச் செல்வதால் உடல் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது.

I feel healthy and active because of this.

 நீந்த ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் ஒருநாள் கூட தாமதமாகச் சென்றதில்லை.

After I started to go to office by swimming across the river 2 year ago, not even for a single day I was late to my office.

 ஆரம்பத்தில் எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்.

At the beginning everyone laughed at me.

ஆனால் இன்று நான் செய்வது சரியென்று ஒப்புக் கொள்கிறார்கள்.

But today they accept that what I did was correct.

குளிர் காலத்தில் நீந்துவதுதான் கொஞ்சம் சிரமமானது.

But it is a bit difficult to swim in the cold season.

அப்போது குளிரைத் தாங்குவதற்கு ஏற்ற ஆடைகளையும் ஷூக்களையும் அணிந்துகொள்வேன்” என்கிறார் பெஞ்சமின்.

At that time, I will wear shoes and dress that will withstand the cold" said Benjamin.

ஆனால் நதியில் தினமும் நீந்திச் செல்வது ஆபத்தானது.

But it is really dangerous to daily swim in the river.

நதியின் போக்கு அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

The course of the river will be frequently changing.

 தண்ணீர் மட்டம் உயரும், குறையும் என்று பெஞ்சமின் குறித்து கவலைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.

The water level will go up and down.
People tell the above reason and worry about Benjamin.

ஒவ்வோர் ஆண்டும் முனிச் நகருக்கு 30 ஆயிரம் மக்கள் புதிதாக வந்து சேரும்போது மாற்றுப் போக்குவரத்தை யோசிக்க வேண்டியது அவசியம் என்கிறார் பெஞ்சமின்.

Since every year around 30,000 people come and settle in Munich, we should think of alternate transportation.

நதியில் படகு விட்டால் பலருக்கும் உதவுமே!

If boat transportation is started across the river, it will help many people.

நன்றி:

தி இந்து  01 Aug 2017  .. உலக மசாலா:
Translated
by

Ezhilarasan Venkatachalam
e3 institute, Arisipalayam, Salem.
English Made Easy
தமிழ் வழியாக ஆங்கில பயிற்சி


Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...