Skip to main content

FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN TDH MARIAPPAN PARA OLYMPICS

Mariappan Thangavelu, Salem.

..
சேலத்தின் தங்க மகன், மாரியப்பன்.

Mariappan Thangavelu, the golden boy from Salem.

செப்டம்பர் 7-ம் தேதி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் பாராலிம்பிக்ஸ் என்றழைக்கப்படும் மாற்றுத் திறனாளிக்கான உலக மெகா போட்டிகள் தொடங்கியபோது, இப்படி ஒரு போட்டி நடைபெறுவதே பெரும்பாலனவர்களுக்குத் தெரியாமல் இருந்தது.

When the para olympics or the international games for the physically challenged, started in Rio De Jenero on September 7, many didn't know that there is such a competition.

இன்றோ பாராலிம்பிக்ஸ் போட்டியைத் தெரியாதவர்கள் யாரும் இல்லை.
But today everybody know about para olympics.

அதற்குக் காரணம் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தின் தங்க மகன் மாரியப்பன் தங்கவேல்.
The reason is Mariappan Thangavelu of Tamilnadu, who got the gold in high jump.

 பாராலிம்பிக்ஸ் நிறைவு நாளில் நம் நாட்டின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பும் மாரியப்பனுக்குக் கிடைத்திருப்பதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கிறார்.
It is his double delight for Mariappan to also get the chances to carry our Indian flag in the closing ceremony.

யார் இந்த மாரியப்பன் தங்கவேல்?
Who is this Mariappan Thangavelu ?

சேலத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரியவடக்கம்பட்டி கிராமம்தான் மாரியப்பனின் சொந்த ஊர்.
His native place is Periya Vadakampatti a village about 50 kms from Salem.

இவருடைய தாயார் சைக்கிளில் காய்கறிகளை வீதிவீதியாகக் கொண்டு சென்று விற்பனை செய்பவர்.
His mother is a vegetables vendor. She used to go by bicycle and sell vegetables.

மூன்றாண்டுகளுக்கு முன்பு மருத்துவ சிகிச்சைக்காக வாங்கிய 3 லட்சம் ரூபாய் கடனைக்கூட இன்னும் திருப்பிக் கொடுக்க முடியாமல் இருக்கும் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் மாரியப்பன்.
He belongs to a poor family that is yet to clear the 3 lakhs medical loan they got three years ago.

ஐந்து வயது இருக்கும்போது மாரியப்பன் வீட்டுக்கு அருகே சாலையில் சென்றபோது பேருந்து மோதி வலது கால் முட்டி நசுங்கியது.
When Mariappan was 5 years old he met with an accident when he was going in the road. A bus hit him and he got his right knee injured.

இதில் கட்டை விரல்களைத் தவிர பிற விரல்களும் மேல் பகுதியும் சேதமடைந்தன.
Due to this, except the toe, all his fingers and the upper parts go injured.

இப்படித்தான் மாரியப்பன் மாற்றுத் திறனாளியானார்.
This is how Mariappan Thangavelu became a physically challenged person.

மாரியப்பனுக்குக் கைப்பந்தாட்ட விளையாட்டுதான் மிகவும் பிடிக்கும்.
Mariappan Thangavelu loves playing volley ball.

பள்ளியில் படிக்கும்போது அதைத்தான் விரும்பி விளையாடுவார்.
He used to play only volleyball in his school days.

அவரது உடற்கல்வி ஆசிரியர்தான் அவருக்கு உயரம் தாண்டுதல் திறன் இருப்பதைக் கண்டுபிடித்தார்.

It was his PT or physical training Sathiya Narayana master who found out that Mariappan Thangavelu had the talent in high jump.

மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், விளையாடக்கூடிய தடகள வீரராகப் போட்டிகளில் பங்கேற்றது 14 வயதில்தான்.
Though he was talented, only at the age of 14 years he started participating in competitions.

முதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று அசத்தினார் மாரியப்பன்.
In the very first competition he got the second place.

மாரியப்பனுக்கு 18 வயதானபோது அவருடைய பயிற்சியாளர் சத்தியநாராயணா தேசிய பாரா-தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்துச்சென்றார்.
Only when Mariappan Thangavelu  attained 18 years of age, his trainer, Mr. Sathiya Narayana took him to national level para events.

பெங்களூருவில் கடுமையான தொடர் பயிற்சிகளுக்குப் பிறகு முதுநிலைப் போட்டிகளில் பங்கேற்கக் கடந்த ஆண்டு தகுதி பெற்றார் மாரியப்பன்.
After intensive training at Bangalore he got himself qualified to participate in SENIOR events last year.

மாற்றுத் திறனாளிகள் விளையாடும் போட்டிகளை குறியீடுகளில் அழைப்பார்கள்.
The names for the physically challenged games are actually represented by CODES.

மாரியப்பன் விளையாடிய உயரம் தாண்டுதல் போட்டியை டி42 (மூட்டு பாதிப்பில்லாத, வலுக்குறைவான, நகரக்கூடிய தன்மையுள்ளவர்) என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.
The competition that Mariappan Thangavelu won has the code D-42. It means competition for persons who are "without knee problem, weak but able to move his body"

அதில் பங்கேற்க மாரியப்பன் தகுதிபெற்றார்.
Mariappan Thangavelu got himself qualified for this event.

மாரியப்பன் தங்கவேல் இப்போது பெற்ற தங்கப்பதக்கம் புதிதல்ல.
Winning gold prize is not new to Mariappan Thangavelu.

‘துனிசியா கிராண்ட் பிரிக்ஸ்’ உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ் நாடு தடகள அணிக்குத் தங்கப் பதக்கம் வென்று தந்தவர்.
He had already won gold for the Tamilnadu team in the THUNISIA GRAND PRIX high Jump competition

அப்போது அவர் 1.78 மீட்டர் உயரம் தாண்டி பாராலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதிபெற்றார்.
He cleared  1.78 metre and thereby got himself qualified for the para olympics.

இந்தப் பிரிவில் 1.60 மீட்டர் உயரம் தாண்டுவதே தகுதிக்கான அளவீடு.
It was sufficient to just clear 1.6 metre in this competition.

 ரியோ பாராலிம்பிக்ஸ் இறுதிப் போட்டியில், 1.89 மீட்டர் உயரம் தாண்டித் தங்கப் பதக்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேல்.
In the Rio Para Olympics, Mariappan Thangavelu cleared 1.89 metres and secured the gold prize.

அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த சாம் க்ரீவீ மற்றும் வருண் பட்டி ஆகியோர் 1.86 மீட்டர் உயரமே தாண்டினார்கள்.
பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் தங்கம் பெறும் மூன்றாவது வீரர் மாரியப்பன் தங்கவேல்.
The next two person viz., SAM IKWE amd VARUN PATI cleared only 1.86 metres.  Mariappan Thangavelu  is the third person to win a gold medal in history of para olympics.


இதற்கு முன்பு நீச்சல் பிரிவில் முரளிகாந்த் பெட்கார் (1972), ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜாஹிரியா (2004) ஆகியோர் தங்கம் வென்றுள்ளார்கள்.
In 1972, MURALI KANTH PETGAR won a gold in swimming and in 2004, DEVENDRA JAHIREYA won a gold in  javelin throw.

பதக்கப் பட்டியலில் பின் தங்கியிருந்த இந்தியா, மாரியப்பன் தங்கவேல் பெற்ற தங்கப் பதக்கம் மூலம் 30 இடங்கள் முன்னேறியது.
India came up 30 places due to the gold prize won by Mariappan Thangavelu.

வலைதளங்களைக் கவர்ந்த மாரியப்பன்!
Social media's pet Mariappan!

சாதாராண கிராமத்தில் பிறந்த ஒரு இளைஞன் தனது அசாத்திய பயிற்சி, முயற்சியால் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமைத் தேடித் தந்ததை சமூக வலைத்தளங்கள் கொண்டாடித் தீர்த்தன.
Mariappan was born in an ordinary village. But due to his unimaginable hardwork and repeated attempts, won gold for India and made us proud. This news was celebrated in the socoal media of the internet.

அதுவும் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழர் உடைமைகள் மீது தாக்குதல்கள் தொடர்ந்த வேளையில் தங்கம் வென்று நாட்டுக்கும், தமிழகத்துக்கும் பெருமைச் சேர்த்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் ஆசை தீரப் பகிரப்பட்டன.
At a time when the properties of Tamilians in Karnataka were being continuously damaged due to the dispute between Tamilnadu and Karnataka over the sharing of the Kaveri water, the MEMES appreciating the gold won my Mariappan shared frenizly in the social media .

ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்ற சிந்து, சாக்‌ஷிக்கு மத்திய அரசு மட்டுமல்லாமல், பல்வேறு மாநில அரசுகளும் போட்டி போட்டுக்கொண்டு பரிசுகளை வழங்கின.
The olympics medal winners like SINDU and SAKSHI were showered with cash and prizes by the central and state governments.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோருக்கு 4 கோடி ரூபாய், வெள்ளி வெல்வோருக்கு 2 கோடி ரூபாய், வெண்கலம் வெல்வோருக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து இன்ப அதிர்ச்சி தந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.
The Delhi CM KAJERIWAL gave a pleasant shock by announcing that Rs. 4 crores, Rs. 2 crores and Re. 1 crore will be given to the olympic medal winners of gold, silver and bronze respectively.

ஒலிம்பிக்கில் வெள்ளி, வெண்கலம் வென்றவர்களுக்குப் பல கோடி பரிசுகள், விலை உயர்ந்த கார்கள் வழங்கப்பட்ட வேளையில், பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் என்ற மாரியப்பனுக்குப் பல மாநில முதல்வர்கள் ட்விட்டர் மூலம் வாழ்த்து சொன்னதோடு நிறுத்திக்கொண்டதையும் சமூக வலைத்தளங்கள் திட்டித் தீர்த்தன.
While the olympics medal winners were given costly cars and crores of cash prizes, the para olympics winner Mariappan was just congratulated via Twitter messages for his achievement. No cash prizes were given. This was criticized very much in the social media.

THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES

Translated by
Ezhilarasan Venkatachalam
Tamil Based English Trainer Spoken English Trainer 
Salem.

நன்றி:  "தி இந்து " தமிழ் நாளிதழ்
Courtesy :  The Hindu Tamil newspaper.


FOR MORE PLEASE VISIT :
http://e3translation.blogspot.com.

*** 

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...