பேரணாம்பட்டு அருகே மாணவி கை அகற்றப்பட்ட விவகாரம்: தனியார் பள்ளியை உறவினர்கள் முற்றுகை
The removal of
school girl’s hand at Pernampatti : Relatives gather in front of the school and
protested
இதுகுறித்து,
போலீஸ் தரப்பில் கூறியதாவது: பேரணாம்பட்டு சாத்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதாச்சலம்
(35). இவரது மகள் தாரகை (5). இவர், பல்லலகுப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக்
பள்ளியில் யுகேஜி படித்துவந்தார். கடந்த 20-ம் தேதி மாலை பள்ளி வாகனத்தில் வீடு திரும்ப
புறப்பட்டார்.
Police said that
Vedachalam (35) and his daughter Tharagai (5) lived in the Saathgar village in
Pernampattu. She was studying UKG in a private marticulation school in the Palalakuppam
village. On last month 20th evening she was returning home in the school
vehicle.
3 விரல்கள் சேதம்
வாகனத்தின் ஜன்னல் ஓரத்தில் தாரகை அமர்ந்திருந்தார். பள்ளி வளாகத்தில் இருந்து வாகனம் கிளம்பியபோது, பள்ளியின் சுற்றுச்சுவரை உரசியபடி வாகனம் சென்றது. அப்போது, தாரகையின் வலது கையின் மூன்று விரல்கள் சேதடைந்தன.
3 Fingers
damaged
The girl,
Tharagai was sitting near the window in the vehicle. When it started out of the
school campus, it had brushed the compound wall. In this, three fingers of
Tharagai’s right hand got crushed.
இதையடுத்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரது வலது கையை முழுமையாக அகற்றினால் மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடியும் என கூறிவிட்டனர். வேறு வழியில்லாமல் சிறுமியின் வலது கை அகற்றப்பட்டது. தற்போது சிறுமி நல்ல நிலையில் உள்ளார்.
Following this,
the girl was admitted in a private hospital in Vellore. There the doctors told them
that unless the girl’s hand is severed, her life can not be saved. Since, there
was no alternative, the girl’s right hand was severed. Now the girl is in good
condition.
இந்நிலையில், சிறுமியின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதைதான் காரணம் என்று கூறி, 300-க் கும் மேற்பட்ட உறவினர்கள், பொதுமக்கள், பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். பள்ளியின் வாசலை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கக் கோரினர்.
Telling that the
carelessness of the school management has caused this, more than 300 people –
relatives, public and political party representatives gathered in front of the
school. They blocked the school entrance and agitated. They demanged
compensation for the affected girl.
COURTESY
: THE HINDU TAMIL dated 03.11.2015
Translation by EZHILARASAN VENKATACHALAM
Comments
Post a Comment