..
Courtesy Tamil Newspaper : TAMIL THE HINDU – 17.11.2015.
புற்று நோயாளிகளுக்காக நிதி திரட்டும் வகையில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் மும்பை புறநகர் ரயிலில் பயணம் செய்து பாட்டு பாடினார்.
In order to raise funds for cancer victims, Amithab Bachchan
travelled and sang in the Mumbai sub-urban train.
*
*
மும்பையைச்
சேர்ந்தவர்
சவுரவ். இவர் மும்பை புறநகர் ரயில்களில் பாடல்கள் பாடி புற்றுநோயாளிகளுக்கு நிதி திரட்டி வருகிறார். அவர் குறித்த சிறப்பு பகுதி இந்தி நடிகர் அமிதாப் பச்சன் பங்கேற்கும் ஆஜ் கி ராத் ஹை ஜிந்தகி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
Sowrouv belongs to Mumbai. He travels and sings in the Mumbai
sub urban trains to raise funds for cancer victims. A news item about this
person will be telecast in the programme, “aaj kee raath hain zinthagi”
participated by Amithab Bachchan.
இதற்காக விக்டோரியா முனையத்திலிருந்து பாண்டுப் செல்லும் ரயிலில் சவுரவுடன் இணைந்து அமிதாப் பச்சனும் பயணம் செய்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பயணிகள் மத்தியில் திடீரென அமிதாப் பாடியதால் பயணிகள் அனைவரும் திகைப்பில் ஆழ்ந்தனர்.
For this program, Amithab Bachchan travelled along with Sowrouv
in the sub-urban train from Victoria Terminus to Pondup. Suddenly, to the
pleasant surprise of everyone, Amithab Bachchan
started to sing.
இதுதொடர்பாக
அமிதாப் பச்சன் ட்விட்டரில் கூறியிருப்ப தாவது:
சவுரவ் ரயில் பயணம் செய்து கிதார் இசைத்தபடி பாடுகிறார். அவரது பாடலை கேட்டு பயணிகள் கொடுக்கும் நிதியை மும்பையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்குகிறார். அவரது எண்ணம் மலைப்பில் ஆழ்த்துகிறது. இதயத்தை தொடுகிறது. அவர் செல்லும் தொலைவு வரை கூடவே அமர்ந்து பயணம் செய்ய வேண் டும் என்பது எனது விருப்பம்.
Regarding this Amithab Bachchan said in his twitter page:
“Sowrouv travels in the train playing his guitar and singing to collect funds.
People hear him and give money. This money he hands over to the cancer victims
and their families in Mumbai. I am very much impressed by his idea. It touches
my heart. It is my wish to travel along with him in the train as far as he
goes.
ஊடகங்களில்
செய்தி வர வேண்டும் என்பதற்காக அல்ல. ஆஜ் கி ராத் ஹை ஜிந்தகி நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதும் இதன் நோக்கமல்ல. புற்று நோயாளிகளுக்கான நற்பணியில் தனி ஆளாக இருப்பதாக சவுரவ் நினைத்திடக்கூடாது. அதனால் என்னையும் இதில் இணைத்துக் கொண்டுள்ளேன்.
I do this not to get the attention of the media or to popularize
the programme, “aaj kee raath hain
zinthagi”. Sowrouv should not think that he is alone in helping the cancer
victims. That was the reason why I joined hands with him.
இந்த தொைலைக்காட்சி நிகழ்ச்சி முடிந்து அவர் சென்ற பிறகும் எனது ஆதரவு இருக்கும். இப்படி செய்யும்போது பிறரும் இதேபோல் செய்ய முன்வருவார் கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
My support for him will continue even after this TV programme
gets over. If I do this, I hope others will also come forward to do such
things.“
Courtesy Tamil Newspaper : TAMIL THE HINDU – 17.11.2015.
Translation by
EZHILARASAN VENKATACHALAM
ENGLISH TRAINER FOR TAMIL SPEAKING PEOPLE
SOUTH INDIA.
SOUTH INDIA.
Comments
Post a Comment