TdH 20151029 AJITH ANSWER-FREE ENGLISH TRAINING THROUGH TAMIL TRANSLATION BY EZHILARASAN - Hints Answer
ANSWER FOR HINTS DEVELOPMENT –(FULL SENTENCES)
TAMIL THE HINDU – TRANSLATION – (HINTS ANSWER) TAMIL THE HINDU 2015-10-29 [YY-MM-DD]
CLICK HERE FOR HINTS ONLY
அஜித்தைப்
பற்றி அவதூறாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கள் வெளியிட்டதற்கு நடிகர்
கருணாஸ் போலீஸ் புகார் அளிக்க இருக்கிறார்.
Actor Karunas reports to police that somebody had posted comments defaming actor Ajith Kumar in his page in his “tweeter” account.
தென்னிந்திய
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக போட்டியிட்டு துணைத் தலைவராக
ஜெயித்திருக்கிறார் நடிகர் கருணாஸ். @actor_karunas என்ற பெயரில் ட்விட்டர்
தளத்தில் இயங்கி வருகிறார்.
Actor Karunas had contested in the South Indian Actors’ Association Election on behalf of the team headed by actor Vishal. And he had been elected as the Vice President. He had been operating a “tweeter” account in the name “actor_karanas”.
அவருடைய
ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் சங்க கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில்
நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை,எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை
மிதிக்கக் கூடாது" என்ற கருத்து வெளியிடப்பட்டது. இக்கருத்தால் பெரும்
சர்ச்சை நிலவியது.
The following message had been posted in his page without his knowledge. The message reads, “If any cinema related function is conducted on behalf of the association abroad, we should not include actor Ajith. And for no reason we should step into Ajith’s house” This message had created problem.
இந்நிலையில்
இக்கருத்து குறித்து கருணாஸ் அளித்துள்ள விளக்கத்தில், "என்னுடைய ட்விட்டர்
கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளை கூறியதாக இன்று செய்தி
வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
Actor Karunas offered the following explanation to this message. In my “tweeter” page, the above message that has the tone that I am trying to defame actor Ajith has been published. This is totally wrong.
யாரோ
விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை
வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர்
நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன்.
Some unwanted person had published the above “wrong and illegal” message in my tweeter account. Right from the beginning and till date, I had been behaving very friendly to all actors and actresses.
யார்
மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது.
இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக
இருக்கிறது. இது பற்றி நாளை கமிஷனரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்" என்று
தெரிவித்திருக்கிறார் கருணாஸ்.
Comments
Post a Comment