அன்பும் மனித நேரமும் பல்கிப் பெருகட்டும்!
Translation - UNFORTUNATE HELICOPTER CRASH IN NILGIRIS - LET LOVE AND HUMANITARIAN ACTS FLOURISH
--
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராம மக்களை இந்திய ராணுவத் தென்மண்டல அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் அருண் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
The Southern military officer, Lieutenant General Arun, met the village people of Nanjappa Chatram in Kunnoor, Nilgris and thanked them.
அப்பகுதியில் கடந்த 8-ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கிராம மக்கள் செய்த உதவியை மறக்காமல் ராணுவம் நன்றி பாராட்டியுள்ளது.
When the military Chief Bipin Rawat's helicopter crashed there on 8th December 2021, the villagers helped the military personnels in the recovery operation. In this accident 13 persons were killed. Without forgetting this good deed, the military had thanked them.
இந்த விபத்தில் சிக்கிய ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடிந்தாலும், விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் செய்த உதவி விலைமதிப்பற்றது என்று ராணுவ அதிகாரி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
"Though only one person was recovered alive, the help that the Nanjappa Chatram people did were priceless", said the military officer, Arun with gratitude.
விபத்தின்போது உதவிய தமிழகக் காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு ராணுவம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தாலும், .....
Although the villagers were thanked by the Police Department, Fire Department and other Government departments and the military, ...
.... கிராம மக்களை நேரில் சந்தித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறி, ராணுவ அதிகாரி அருண் நேரில் சென்று கிராம மக்களைப் பாராட்டி உணவு, உடை மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார்.
... the military officer, Arun wanted to meet them in person and express his gratitude and also give them food, dress and other gifts.
அதுமட்டுமின்றி, நஞ்சப்பசத்திரம் கிராமத்துக்கு மாதந்தோறும் மருத்துவர்களை அனுப்பி இலவச சிகிச்சை அளிப்பதாகவும், கிராம மக்கள் ஓராண்டுக்கு ராணுவ மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.
Not only this, he also said that he would send doctors monthly to Nanjappa Chatram village and do free medical services to them. Further he also declared that for one year they can available free treatment in the military hospital.
அரசு அதிகாரிகள் சார்பிலும், கிராம மக்கள் சார்பிலும் தங்களால் முடிந்த உதவிகளை அந்தக் கிராம மக்களுக்கு செய்துதருவதாக உறுதி அளித்திருந்தாலும், இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் நேரில் சென்று, எளிய கிராம மக்களை அமரவைத்து, நன்றி தெரிவிப்பது அன்பு மற்றும் மனிதநேயத்தின் உச்சம்.
Although the villagers were assured by the Government departments for welfare schemes, it was a peak of humanitarian gesture that the military officer gathered the village people, made them sit and expressed their gratitude.
ராணுவ அதிகாரிகளுக்கும் அந்தக் கிராமத்துக்கும் தொடர்பே இல்லாத நிலையில், ஒரு விபத்து அவர்களை இணைத்துள்ளது.
Thought there was no link between the military and the village people, this accident had linked them.
தீயணைப்புத் துறை வாகனம்கூட போக முடியாத ஒரு மலைப் பகுதியில் விபத்து நடந்தபோது ஓடிச்சென்று தங்களிடம் இருந்த குடம், வாளி மூலம் தண்ணீரை ஊற்றித் தீயை அணைத்து, தங்களிடம் உள்ள போர்வைகளை வழங்கி உதவியுள்ளனர்.
The villagers ran with their pots and buckets with water and tried to put off the fire in the hilly place, where even a fire engine can't reach. They have also given their bedsheets to recover the people trapped.
எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் கிராம மக்கள் காட்டிய அன்பும் மனிதநேயமும் அவர்களுக்குப் பன்மடங்காகத் திரும்பியுள்ளது.
The humanitarian gesture they did with love and affection and without any expectations, had returned to them manifold.
அன்பு மற்றும் மனிதநேயத்தின் வலிமையே இதுதான்.
This is the power of true love and affection.
சாதி, மதம், இனத்தின் பெயரால் பிரிவினைக் கருத்துகளும், வெறுப்பு விதைகளும் விதைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில், இதுபோன்ற மொழி, இனம், சாதி, மதம் கடந்த அன்பும், மனிதநேயமும்தான் மனிதகுலத்தைக் காக்கும்.
Presently lot of hatred seeds and conflict creating ideas are being planted in the name of caste, creed and religion. At such a time, acts like these, filled with love, crossing caste, creed and religion, will definitely save humanity.
இன்றைய காலகட்டத்தின் தேவை, இதுபோன்ற மனிதநேயச் செயல்களே.
These loving acts are the necessity for the present day.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறரிடம் காட்டும் அன்பு பன்மடங்காகப் பெருகும்போது வெறுப்புப் பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட்டு, நாட்டில் ஒற்றுமை அதிகரிக்கும்.
When the love showered upon others without any expectation gets multiplied manifold, the hatred campaigns will definitely lose and unity will flourish in the country.
நன்றி : தி இந்து தமிழ் திசை
டிசம்பர் 15, 2021 [The Hindu Tamil Thisai]
PREFACE / POST SCRIPT :
This is my translation of a touching article on thanks giving by Southern Military Officer, Lieutenant General Arun.
Please recall that an unfortunate helicopter crash of our military Chief Bipin Rawat's helicopter crashed there on 8th December 2021 near Nanjappa Chatram in Kunnoor, Nilgris.
-=-=-
English translation
by
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
[THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES]
Comments
Post a Comment