Skip to main content

kurangu bommai movie review Translation Venkatachalam Salem

 kurangu bommai   movie review Translation  Venkatachalam Salem


Hard words or vocabulary 

குரங்கு பொம்மை  .. ..
The Monkey Doll ..

This is what you call a movie!
இதுதான் சினிமா! -
Movies like KAKA MUTTAI, VISARANAI are good examples for world class movies that many lamented will never appear in the Tamil cinema industry. - தமிழில் உலக சினிமாக்கள் தோன்றவே முடியாது என்ற அங்கலாய்ப்புக்குச் சமீப காலத்தில் ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற படங்கள் பதிலாக அமைந்தன.

Just when the heated discussions on these movies subsided,  KURANGU BOMMAI had arrived. - அந்த இரண்டு படங்கள் பற்றிய உரையாடல் ஓய்ந்திருக்கும் தருணத்தில் வந்திருக்கிறது ‘குரங்குபொம்மை’.

We should view this movie as an evidence for an increase in the count of young directors who relish a movie and also have a passion for creating world class cinema. - சினிமாவை நேசித்து அதை ரசனையுடன் அணுகத் துடிக்கும் புதுமுக இயக்குநர்களும், நல்ல சினிமாவை எடுக்கவேண்டும் என்ற துடிப்புடன் முன்வரும் புதிய தலைமுறை தயாரிப்பாளர்களும் அதிகரித்திருக்கிறார்கள் என்பதற்கான அடையாளமாகவே ‘குரங்கு பொம்மை’ ~யைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

Tamil cinema seems to be an iron fortress dominated by top heroes who are shameless in acting in non sense movies. But recent low budget movies like KURANGU BOMMAI  is confirming us that this trend is changing. - அடிப்படை நியாயம் குறைவாக இருக்கும் கதைகளில் நடிக்க கொஞ்சமும் கூச்சம் கொள்ளாத முன்னணிக் கதாநாயகர்களின் இரும்புக் கோட்டையாகவே தமிழ் சினிமா தொடர்ந்தாலும் அந்த நிலைமை மெள்ள மாறிக்கொண்டு வருவதை ‘குரங்கு பொம்மை’ போன்ற சமீபத்திய சிறு முதலீட்டில் தயாராகும் உள்ளடக்க ரீதியான பெரிய படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

Rather than the star value, only movies like this, wherein the characters and the story is given due importance, can shift the Tamil cinema towards a good path.

நட்சத்திர முகங்களைவிட, கதாபாத்திரங்களும் திரைக்கதையும் தான் எல்லாமும் என்ற நிலையை நோக்கி இது போன்ற படங்கள்தான் தமிழ் சினிமாவை நகர்த்த முடியும்.

However, KURANGU BOMMAI did not fail in being a good entertainer and a good movie just became it had to an excellent message it communicate.

 ‘குரங்கு பொம்மை’ தனது செய்தி நேர்த்தியால் சிறந்த பொழுதுபோக்கு உணர்வு, சிறந்த சினிமா அனுபவம் இரண்டையும் ஒருசேர வழங்கத் தவறவில்லை.

While trying to portray a real life character in a movie, unwanted cinematic elements also gets attached to it.

மக்கள் கூட்டத்துள் நிறைந்திருக்கும் நிஜக் கதாபாத்திரங்களை திரைக்குள் கொண்டுவரும்போது, சினிமாத்தனமும் சேர்ந்தே ஒட்டிக்கொண்டுவிடுகிறது.

Many directors give unwanted tint to the original character, in their compulsion to make the movie a commercial success.

 ‘வணிக ரீதியாக வெற்றிபெற வேண்டும்’ என்ற முன் தீர்மானத்துடன், கதாபாத்திரங்களின் இயல்பான கச்சாத் தன்மைக்கு பெரும்பாலான இயக்குநர்கள் வண்ணம் தீட்டிவிடுகிறார்கள்.

The debut director, NITHILAN, had demonstrated that he can break this old rule in his very first movie KURANGU BOMMAI itself.

இதுவரையிலும் ஆகி வந்திருக்கும் இந்த விதியைத் தனது முதல் படத்திலேயே தகர்க்க முடியும் என்று காட்டியிருக்கிறார் ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் நித்திலன்.

There are only 4 main characters in this movie. There is a middle aged village character in this movie reminding KARNAN, who lost his life due to friendship. He made a sincere attempt to show his loyalty.

மொத்தமே நான்கு முக்கிய கதாபாத்திரங்கள்தான். செஞ்சோற்றுக் கடனுக்காக கூடா நட்பால் வீழ்ந்த கர்ணனை நினைவூட்டும் கிராமத்துச் சாமானியனாக ஒரு நடுத்தர வயதுக்காரர்.

Another character is a young person who shows his anger on his father for being associated with a corrupt person. Yet he is a loving son who doesn't hate his father.

Then there is an aged man. Though he lives a tainted life, like DHURIYOTHANA, he exhibits geniune suffering when problems comes to his beloved friend. Then the fourth character is a greedy man from the city, who soon meets with disaster.

சேரக்கூடாத இடத்தில் இருக்கும் தன் தந்தையின் மீது அதற்காக கோபத்தைக் காட்டினாலும் வெறுப்பைக் காட்டாத ஒரு பாச மகன், கெட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும் நண்பனுக்காகத் துடித்துப்போகும் துரியோதனனை நினைவுபடுத்தும் பெரிய மனிதர், பணத்தின் மீது பேராசை கொண்டு அழிவைச் சந்திக்கும் நகர்ப்புறத்தின் சாமானியன்.

Of these four characters, the three  - Bharathiraja, Vidarth and Elango Kumaravel, the drama artiste, are known faces.

இந்த நான்கு கதாபாத்திரங்களில் மூன்றினை ஏற்று நடித்திருப்பவர்கள், தமிழ்ப் பார்வையாளர்கள் நன்கு அறிந்த பாரதிராஜா, விதார்த், நாடகக் கலைஞரான இளங்கோ குமரவேல்.

But not only these three,  even the newcomers are being identified by us as only the  characters. This is where the skill of director NITHILAN lies.

ஆனால் இவர்கள் மூவரை மட்டுமல்ல, புதுமுக நடிகர்களையும் கதாபாத்திரங்களாக மட்டுமே தெரியும்படி செய்ததில் தன் ஆளுமையை வெளிப்படுத்தியிருக்கிறார் நித்திலன்.

There is a perfect synchronization of an actor moulding himself as the given character.

The powerful way in which a character was created is very important for an actor to imbibe it and exhibit it after adding his contribution to it while acting.

நடிகர்களை கதாபாத்திரங்களில் பொருத்திக்கொள்ளச் செய்வதிலும் கதாபாத்திர வடிவமைப்பு நடிகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கமும் அழுத்தமும் முக்கியமானவை.

Vidharth had made good decisions in choosing his character as a village youth role in certain movies and as an urban young role in others.

விதார்த் பல படங்களில் கிராமத்து இளைஞன், சில படங்களில் நகரத்து இளைஞன் என்று தனக்கான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார்.

In this movie,  he had perfectly portrayed himself as the character, KATHIR.

இந்தப் படத்தில் கதிர் கதாபாத்திரமாகத் தன்னைப் பொருத்திக் கொண்டுவிடுகிறார்.

People used to say that as a director BHARATHIRAJA used to teach exaggerated acting or over acting to his artistes in his shooting spots.

ஒரு இயக்குநராக பாரதிராஜா தனது படப்பிடிப்பு தளங்களில் மிகை நடிப்பைக் கற்றுத்தருபவர் என்று கூறப்படுவதுண்டு.

But he had effortlessly portrayed the character SUNDARAM, a simple man in this movie.

ஆனால் சுந்தரம் எனும் எளிய மனிதனாகத் தன்னை வெகு இயல்பாக வெளிப்படுத்திச் சென்றுவிடுகிறார்.

Though SUNDARAM, is a small role, it is going to be the lifetime best for BHARATHIRAJA.

சிறு கதாபாத்திரமே என்றாலும் பாரதிராஜாவுக்கான வாழ்நாள் கதாபாத்திரம்போல் நின்றுவிடுகிறார் சுந்தரம்.

There is a touching scene in which BHARATHIRAJA pleads to the person who is going to kill him in a short while. He pleads in a melting voice, "My son is a driver somewhere here. Please allow me to see him once. I promise that I will not tell him that you are going to kill me. You are younger than me, otherwise I wouldn't mind falling on your feet.'

எதிரே இருப்பவன் தன்னைக் கொல்லப்போகிறான் என்று தெரிந்ததும் “ எம்மகன் இங்கதான்யா டிரைவரா இருக்கான்… அவனை ஒரு தடவை பார்த்துட்டு வந்துர்றேன். என்னைவிட நீ வயசு கம்மியா இருக்க தம்பி. இல்லன்னா நான் உன் கால்ல விழுந்துருவேன். நீ என்னக் கொல்லப்போறேன்ற விஷயத்த என் மகன்கிட்ட சொல்லமாட்டேன்” என்று தீனமான குரலில் சுந்தரமாகவே மாறி பாரதிராஜா கெஞ்சும் காட்சி உலுக்கிவிடுகிறது.

In this scene, very high moral points had be communicated in a subtle way.

இந்தக் காட்சியில் மிக உயர்ந்த நீதிபோதனையை மறைமுகமாக, ஆனால் வலுவாகச் சொல்லிவிடுகிறது படம்.

Situations like these make our eyes wet in the movie that runs for hardly for two hours.

இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படத்தில் இதுபோன்ற தருணங்கள்  கலங்க வைத்துவிடுகின்றன.

Producer Thaenappan, though had acted in many small roles previously, as YEGAMBARAM, his acting is very realistic.

இதற்குமுன் ஒருசில சின்ன கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும் ஏகாம்பரமாக தயாரிப்பாளர் தேனப்பன் தந்திருக்கும் நடிப்பு மிக நம்பகமானது.

This character is a paid killer, though he had already made his friend as a scapegoat,  after he comes to know that his close friend is missing he gets upset. When he gives second priority to money, his lost respect is regained a little.

 பணத்துக்காகக் கொலையும் செய்யும் இந்தக் கதாபாத்திரம், உயிர் நண்பனைப் பகடையாக்கினாலும் அவனைக் காணவில்லை எனும்போது பணத்தை இரண்டாமிடத்தில் வைக்கும் கட்டத்தில் இழந்த மரியாதையில் கொஞ்சம் ஈட்டிவிடுகிறது.

As a paid worker a person is ready to carry in his bag either a smuggled God's idol or severed human head without any feeling of guilt. As long as his boss pays his monetary compensation, he doesn't bother to worry about anything else. There is a character, KALKI that wants to spread one crore rupees on her bed and sleep on it. These are of course real life characters in our society.

எத்தனை தீய வழியில் என்றாலும் தனக்கு பணம் கிடைத்தால் போதும், தன்னை இயக்குபவன் தரும் பையில் பஞ்சலோகச் சிலையோ அல்லது அறுக்கப்பட்ட மனிதத் தலையோ எதுவென்றாலும் அதைச் சுமந்துசெல்ல மனத்தடை இல்லை என நினைக்கும் கிருஷ்ணமூர்த்தியும், ஒரு கோடிப் பணத்தை படுக்கையில் விரித்துத் தூங்க அலையும் கல்கியும்கூட நமக்கு மத்தியில் நடமாடும் கதாபாத்திரங்கள்தான்.

Though there are flaws in love scenes, to tell a crime thriller movie in an interesting way, the director had created a neat screen play and utilized minute details and had proved himself.

காதல் காட்சிகளில் இருக்கும் குறைகளைக் கடந்து, சுவாரஸ்யமான கதை சொல்ல, நுணுக்கமான விவரங்கள், நேர்த்தியான திரைமொழி ஆகியவற்றின் மூலம் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை நேர்மையான படமாகத் தரமுடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர்.

Kurungu Bommai is a good evidence to prove that a screen is an excellent medium of expression for a director.

திரை ஒரு இயக்குநரின் ஊடகம் என்பதற்கு மேலும் ஒரு தேர்ந்த சாட்சியம் ‘குரங்கு பொம்மை’.

You can not simply neglect this movie.

Written
by Jayanthan

இது ஒதுக்க முடியாத சினிமா.
ஜெயந்தன்

Translated
by

Ezhilarasan Venkatachalam ,
English Trainer, Salem

நன்றி :

தி இந்து : 08 Sep 2017 திரைப் பார்வை


Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. அறிமுகம் -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி —  பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு --என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. =_=_=_=_=_=_=_=_=_=_=_=_ Introduction  :  Friends, Tamil poet Barathiyar's poems will ignite our minds and fill our hearts with tons of self confidence. It was my long time wish to translate some of them. Here is my translation of " thaedi sooru nitham thindru "  as best as I could do. ................................................. // Thaedi choru nitham thindru  Translation Venkatachalam Salem Barathiyar song ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம்

Translation sandwich -- MY ROAD ACCIDENT AND HOW MS.SHIVANI GUPTHA INSPIRED ME

My road accident and how Ms. Shivani gupta inspired me என் சாலை விபத்தும் ஷிவானி குப்தா எனக்கு கொடுத்த பெரிய ஊக்கமும். -- -- .. ONLINE ENGLISH CLASSES   through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி ..  I am indebted to Ms. Shivani Guptha, a wheelchair confined lady, who gave new energy to my life in May 2007. /  ஒரு சக்கர நாற்காலியுடன் தன் வாழ்க்கையை கழிக்கும் ஷிவானி குப்தா, மே 2007~இல் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளேன். Friends, On 12th April 2007 at 9.30 pm I met with a road accident. I had two fractures, one on my right leg and another on my right hand . /  நண்பர்களே, ஏப்ரல் 12 ஆம் தேதி 2007 அன்று இரவு  9.30 மணியளவில் நான் ஒரு சாலை விபத்தை சந்தித்தேன். அதில் எனக்கு இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. என் வலது காலில் ஒன்று, என் வலது கையில் மற்றொன்று. I have a six inch steel or alloy implant in my right thigh even today. I was lucky enough to get immediate medical attention./ பிறகு என் வலது தொடையில் ஒரு ஆறு அங்குல எஃகு அல்லது "