Song 21 to 30 moothurai Translation Ezhilarasan Venkatachalam .. . [=] moothurai -- songs 1 to 10 [=] Moothurai -- songs 11 to 20 mm Song 21. இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும். பொருள்: நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை. ... If you happen to get a "good" wife, you need no other wealth in your home. ஆனால் அந்த இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும். ... However, if your wife happens to be bad or vetos your words, then your home turns into a den where tigers live. Song 22. எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பவத்தில் செய்த வினை. பொருள்: மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம் சென்றாலும், ...
ஆங்கில கட்டுரைகளும் என் தமிழ் மொழிபெயர்ப்பும். பலவற்றை நீங்கள் கற்க உதவும் வலைப்பூ