MANAGEMENT TIPS that I learnt from K.S.M. SIR.
-
-
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
K.S.M. ஐயாவிடம் இருந்து நான் கற்ற மேலாண்மை குறிப்புகள்
[ ver1 - Translation]
I learned many life skills and management tips from my mentor, K.S M.
என் வழிகாட்டி, K.S.M. ஐயாவிடம் இருந்து பல வாழ்க்கை திறன்களையும் நிர்வாக வழிகாட்டல்களையும் நான் கற்றுக்கொண்டேன்.
I owe him a lot.
நான் அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்.
I worked at M/s.Premier mills, HOSUR for 8 years.
(1986 - 1994). But my last one year under K.S.M. Sir was unforgettable.
நான் பிரிமியர் மில்ஸ், ஓசூர் கம்பெனியிவ் 8 ஆண்டுகள் வேலை செய்தேன். (1986 - 1994). ஆனால் K.S.m. சார் கீழ் நான் வேலை செய்த கடைசி ஒரு வருடம் தான்
என் வாழ்க்கையில்
மறக்க முடியாத நாட்கள்.
I can say that he meticulously molded me from a clay to a beautiful statue.
ஒரு களிமண்ணிலிருந்து ஒரு அழகிய சிலையை செய்வது போல அவர் என்னை
வடிவமைத்தார் என்று கூறலாம்.
MY "GATE PASS" ERROR incident
என் "கேட் பாஸ்" பிழை நிகழ்வு
Once our "dot matrix" printer was under repair. It was given to the service engineer.
ஒருமுறை எங்கள் "டாட் மேட்ரிக்ஸ்" பிரிண்டர் (அச்சுப்பொறி) பழுதாகி விட்டது.
But the H.C.L. service Engineer didn't complete it and return it in time.
இது சேவை பொறியாளரிடம் (சர்வீஸ் இஞ்சினியர்) கொடுக்கப்பட்டது. ஆனால் h.c.l. சேவை பொறியாளர் அதை விரைவாக முடித்து திரும்பித் தரவில்லை.
So I was forced to take the company car to HOSUR and bring it urgently to our factory.
அதனால் நான் அவசரமாக
கம்பெனி காரை எடுத்துக் கொண்டு ஓசூர் சென்று அதை தொழிற்சாலையிற்கு கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
In the urgency, I forgot to fill out a mandatory form called "INWARD ENTRY" in the GATE.
அவசரத்தில், நான் கேட்டில் "உள் நுழைவு" என்று ஒரு கட்டாய படிவத்தை நிரப்ப மறந்துவிட்டேன்.
Few days back the printer was taken out and it made an "OUT ENTRY" at the gate.
சில நாட்களுக்கு முன் பிரிண்டர் (அச்சுப்பொறி) வெளியே எடுத்து செல்லப்பட்டு இருந்தது.
அது வாயிலில் ஒரு "வெளியே சென்றது" என்று பதிவு செய்யப்பட்டது.
But when I brought in, I "missed out" making an "INWARDS ENTRY".
ஆனால் நான் உள்ளே வந்தபோது, "உள் நுழைவு" செய்யப்பட்டது என்று பதிவு செய்ய தவறி விட்டேன்.
If I had done that it would have automatically cancelled the "out entry" made a few days ago.
நான் அப்படி செய்திருந்தால், சில நாட்களுக்கு முன்பு "அவுட் நுழைவு" செய்தது தானாகவே ரத்து ஆகியிருக்கும்.
As per company rules,the movement of machinery without proper recording is "almost" like a theft.
நிறுவன விதிகளின் படி, முறையான பதிவு இல்லாமல் இயந்திரத்தை இப்படி வெளியே அல்லது உள்ளே எடுத்து செல்வது "கிட்டத்தட்ட" ஒரு திருட்டு போலவே கருதப்படும்.
KSM knew that I am a honest person. And wanted to prevent a black mark on me.
நான் ஒரு நேர்மையான நபர் என்று KSM ஐயா அறிந்திருந்தார். மேலும் என் மேல் கரும்பள்ளி விழாமல் தடுக்க விரும்பினார்.
Based on this negligence, the company can issue me a "SHOW CAUSE NOTICE".
இந்த அலட்சிய செயலின் அடிப்படையில், நிறுவனம் என் மேல் ஒரு "விளக்கம் கொடு"
(ஷோ காஸ் நோட்டீஸ்) என்று ஒரு குற்ற நடவடிக்கையை எடுக்க முடியும்.
And ask me to give a written explanation.
ஒரு எழுதப்பட்ட விளக்கத்தை என்னிடம் கேட்கலாம்.
Every month a monthly report was taken by the security department. I think the report was pending at my boss, KSM's table for a week or more.
மாதா மாதம் ஒரு மாத அறிக்கையை பாதுகாப்பு துறை தயாரிக்கும். இது கையெழுத்து இடப்படாமல் ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட KSM ஐயாவிடம் நிலுவையில் இருந்து உள்ளது என்று நினைக்கிறேன்.
At that time, G.R. or Mr. G. Ravichandran was the G.M. or Unit Head. He too knew about me.
அந்த நேரத்தில், g.r. அல்லது திரு. ஜி. ரவிச்சந்திரன் ஜி.எம் அல்லது பேக்டரி தலைவராக இருந்தார். அவர் என்னைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்.
But as an administrator he can't relax the rules.
ஆனால் ஒரு நிர்வாகியாக அவரால் விதிகளை மீற முடியாது.
On a particular day, my boss called me urgently.
At that time, Unit Head G.R's car was waiting to pick him up for lunch.
அந்த குறிப்பிட்ட நாளில், என் மேல் அதிகார் என்னை அவசரமாக அழைத்தார். அந்த நேரத்தில், யூனிட் தலைவர் ஜி.ஆர் ஐயாவின் கார் அவரை மதிய உணவிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தது.
He was casually walking towards the car.
அவர் நிதானமாக காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
My boss KSM and myself followed him hurriedly.
என் மேல் அதிகாரி KSM ஐயாவும் நானும் அவரை விரைவாக பின் தொடர்ந்து சென்றோம்.
KSM Sir was having the problematic "gate pass" in his hand. I understood the situation.
KSM ஐயா அவரது கையில் பிரச்சனைக்குரிய "கேட் பாஸ்"~ஐ வைத்து கொண்டிருந்தார். நான் நிலைமையை புரிந்து கொண்டேன்.
When G.R. was about to open the car door, KSM Sir gave him the "GATE PASS".
G.r.ஐயா கார் கதவை திறக்க முயன்ற போது, KSM ஐயா அவரிடம் "கேட் பாஸ்"~ஐ கொடுத்தார்.
He has the authority to cancel the "SHOW CAUSE NOTICE" that was pending on me.
என் மேல் நிலுவையில் உள்ள "ஷோ காஸ் நோட்டீஸ்ஸை" ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு உண்டு.
I was hiding behind KSM Sir, as if I were a school student.
நான் ஒரு பள்ளி மாணவனைப் போல KSM ஐயாவின் பின்னால் மறைந்திருந்தேன்.
G.R. peeped at me and understood the situation and signed the paper telling angrily:
G.r. ஐயா என்னை எட்டிப் பார்த்தார், நிலைமையை புரிந்துகொண்டு, கோபமாகக் இப்படி கூறிக் கொண்டே அந்த காகிதத்தில் கையெழுத்திட்டார்:
"THERE SHOULD BE SOME SYSTEM, SATHIYAMOORTHY".
"சில ஒழுங்கு முறை இருக்க வேண்டும், சத்தியம்மூர்த்தி."
Then he slammed shut the car door and it started with a mild zoom.
பின்னர் அவர் கார் கதவை
"டமார்" என்று சப்தமாக மூடியதும் கார் ஒரு லேசான "ஜூம்" ஒலியுடன் நகரத் தொடங்கியது.
Immediately after that KSM looked at me. I told him, "I TOOK THAT SLAP, SIR".
உடனடியாக KSM என்னை பார்த்தார். நான் அவரிடம், "நான் அந்த அறையை என் கன்னத்தில் வாங்கிக் கொண்டேன், சார்", என்றேன்.
The problem was amicably solved. Thanks to KSM Sir's exceptional efforts.
ஒரு வழியாக பிரச்சனை சுமூகமாக தீர்ந்தது. KSM ஐயின் தீவிர முயற்சிகளுக்கு நான் நன்றி கூற வேண்டும்.
Thereafter, I never missed out any GATE PASS entry.
அதன்பின், நான் எந்த நுழைவாயில் (கேட் பாஸ்)
பதிவிலும் தவறு செய்தது இல்லை.
I OWE A LOT TO KSM Sir.
நான் KSM ஐயாவிற்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன்.
Ezhilarasan Venkatachalam
Salem
English Trainer

Comments
Post a Comment