Sandwich version [=] Around 2005, I worked in AYNGARAN's sister concern, AP INTERNATIONAL, Kilpauk Gardens, Chennai, for a few months.
2005 ஆம் ஆண்டில், நான் ஐங்கரனின் கிளை நிறுவனமாகிய ஏ.பி. இன்டர்நேஷனல், கீழ்பாக் கார்டன்ஸ், சென்னையில் சில மாதங்கள் பணிபுரிந்தேன்.
[version 4] -- [பதிப்பு 4]
[ written on 16 July 2022] / 16 ஜூலை 2022 அன்று எழுதப்பட்டது.
While working there, financially I was just able to meet my living expenses at Chennai. I was not able to save anything.
அங்கு பணிபுரியும் போது, சென்னையில் எனது வாழ்க்கைக்கான செலவுகளைச் சமாளிக்க மட்டும் தான் முடிந்தது. என்னால் எதையும் மீதி செய்ய முடியவில்லை.
However, I enjoyed working there. To express my true feelings better, it was like -- "BEING PAID FOR EATING CAKE".
இருப்பினும், நான் அங்கு வேலை செய்வதை மிகவும் ரசித்தேன். எனது உண்மையான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்த, "கரும்பு சாப்பிட கூலி வேண்டுமா? " என்பார்களே. அது போல் பிடித்து இருந்தது.
There were only about 50 staff members in the hi-tech company. Except my boss, all were about 15 to 20 years younger than me.
அந்த ஹைடெக் நிறுவனத்தில் சுமார் 50 ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். என் மேல் அதிகாரியை தவிர, அனைவரும் என்னை விட 15 முதல் 20 வயது இளையவர்கள்.
It was a completely air-conditioned environment.
அது முற்றிலும் குளிரூட்டப்பட்ட சூழலாக இருந்தது.
My job was to watch a movie scene and translate [or transcribe] it into English.
அதற்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் உருவாக்குவது. அதாவது ஒரு திரைப்படக் காட்சியைப் பார்த்து ஆங்கிலத்தில் வசனங்களை மொழிபெயர்ப்பது தான் என் வேலை.
-=-=- part 2
Sometimes, I used to even translate songs. It generally took me about two weeks to "transcribe" a 15-minutes video.
சில நேரங்களில், நான் பாடல்களை கூட மொழிபெயர்ப்பேன். பொதுவாக 15 நிமிட வீடியோவை "டிரான்ஸ்கிரைப்" செய்ய எனக்கு இரண்டு வாரங்கள் ஆனது.
Nobody used to disturb me. Everybody will be busy working with headphones in their heads and watch videos.
யாரும் என்னை தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஒவ்வொருவரும் தலையில் ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு வீடியோக்களைப் பார்த்து வேலை செய்து கொண்டு இருப்பார்கள். நான் சினிமாவில் வரும் உரையாடல்களை பார்த்து பார்த்து MS-Word இல் நான் அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து கொண்டே இருப்பேன்.
However, I was told that every few minutes somebody will copy the MSWORD file in which I type my dialogues and then mix it with video footages.
அதை ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் யாராவது அதை நகலெடுத்து, பின்னர் அதில்
வீடியோ காட்சிகள் வரும் நேரத்தை இணைத்துக் கொண்டே இருப்பார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது.
Hence, I was not allowed to edit or correct matter that I have already typed.
எனவே, நான் ஏற்கனவே தட்டச்சு செய்த விஷயத்தைத் திருத்த அனுமதிக்கப்படவில்லை.
At first, I used to do lengthy translations [sub-titling] of dialogues.
முதலில், நான் உரையாடல்களை நீண்ட மொழிபெயர்ப்பு செய்தேன்.
Then my boss illuminated me that the scene will be in the screen for hardly a few seconds, hence it should be crisp and apt.
அந்தக் காட்சி சில நொடிகள் திரையில் தோன்றும் எனவே அது ரத்தின சுருக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்க வேண்டும் என்று என் பாஸ் என்னிடம் கூறினார்.
-=-=-= part 3
I recall a lean looking "senior" there, about 15 years younger than I am, correcting my English.
என்னை விட சுமார் 15 வயது இளைய மெலிந்த தோற்றத்தை உடைய ஒரு மேல் அதிகாரி எனது ஆங்கில மொழிபெயர்ப்பில் திருத்தங்கள் செய்ததை நான் நினைவு கூர்கிறேன்.
Of course, I "obediently" followed his tips and learnt a lot of English words from him.
நான் "கீழ்ப்படிதலுடன்" அவரது ஆலோசனைகளைப் பின்பற்றினேன். அவரிடமிருந்து நிறைய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேன்.
After checking the quality and speed of my translation, very soon my boss, about ten years older than I am, discovered that I can even translate songs.
எனது மொழிபெயர்ப்பின் தரம் மற்றும் வேகத்தை உணர்ந்து கொண்ட என்னை விட பத்து வயது மேல் அதிகாரி, என்னால் பாடல்களை கூட மொழிபெயர்க்க முடியும் என்பதைக் தெரிந்து கொண்டார்.
I recall translating few songs of Suriya's movie -- Aaru, then Kamal's "Sagala kala vallavan" -- etc.
சூர்யாவின் "ஆறு" திரைப்படத்தின் சில பாடல்கள், பின்னர் கமலின் "சகல கலா வல்லவன்" போன்றவற்றை மொழிபெயர்த்தது எனக்கு நினைவிருக்கிறது.
I discovered translating Vadivelu's comedy scenes for the foreign audience was the most challenging job.
வெளிநாட்டு பார்வையாளர்களுக்காக வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளை மொழிபெயர்ப்பது மிகவும் சவாலான வேலையாக இருந்தது.
Do you remember, Vadivelu's comedy with Singamuthu in a grocery shop selling oil? -- WHICH OIL DO YOU WANT? -- comedy scene -- enna ennai vendum? Translating that was really challenging.
ஒரு மளிகைக் கடையில் எண்ணெய் விற்கும் சிங்கமுத்துவுடன் வாடிவேலு எண்ணை வாங்க வரும் போது செய்யும் நகைச்சுவை உங்களுக்கு நினைவிருக்கிறதா? -- (உங்களுக்கு எந்த எண்ணெய் வேண்டும்? ) -- அதை மொழிபெயர்ப்பது மிகவும் சவாலாக இருந்தது.
=-=-= part 4
The office of AYNGARAN was at Kilpauk Gardens, Chennai. I stayed in a lodge at Nehru Nagar in the OMR - Old Mahabalipuram Road, Chennai.
ஐயங்கரனின் அலுவலகம் சென்னை கில்பாக் கார்டனில் இருந்தது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நேரு நகரில் உள்ள ஒரு லாட்ஜில் நான் தங்கி இருந்தேன்.
In 2005, the OMR was under construction and almost all buildings' front portions were shattered. This included the lodge in which I was staying.
2005 ஆம் ஆண்டில், OMR ஓ எம் ஆர் சாலை கட்டப்பட்டுக் கொண்டு இருந்தது. மேலும் கிட்டத்தட்ட அனைத்து கட்டிடங்களின் முன் பகுதிகளும் சிதைந்து இருந்தன. இதில் நான் தங்கியிருந்த லாட்ஜும் அடங்கும்.
Nearby bus-stops were Kandan Chavadi and Perungudi.
அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள் கந்தன் சாவடி மற்றும் பெருங்குடி ஆகும்.
Daily from Nehru Nagar, just below Thiruvanmiyur, I used to travel for a solid one hour in the public transport to my office at Kilpauk Gardens.
திருவன்மியூருக்குக் கீழே உள்ள நேரு நகரில் இருந்து தினமும் நான் கில்பாக் கார்டனில் உள்ள எனது அலுவலகத்திற்கு செல்ல பொதுப் போக்குவரத்தில் ஒரு மணி நேரம் பயணம் செய்வேன்.
My travel will be via Adyar, Nungambakkam High Road, Pachaiyappa's College to the New Avadi Road.
எனது பயணம் அடையார், நுங்கம்பாக்கம் நேடுஞ் சாலை, பச்சையப்பா கல்லூரி வழியாக புதிய ஆவடி சாலைக்கு செல்வது.
Unfortunately, I will have to quit that job become I was not able to save anything during my four months tenure there.
துரதிர்ஷ்டவசமாக, நான் அந்த வேலையை விட்டுவிட வேண்டி இருந்தது. அங்கு வேலை செய்த நான்கு மாதத்தில் என்னால் எதையும் சேமிக்க முடியவில்லை.
Then I was not using a walking stick.
அப்போது நான் ஊன்றுகோலை பயன்படுத்தவில்லை.
(+)(+)
This was written in English and it was translated into Tamil a few years ago.
Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer
Comments
Post a Comment