Translation POOVUKUL OLINTHIRUKUM - movie JEANS - ROMANTIC TAMIL SONG --
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் >>The bunch of fruits hidden in the flowers are wonders!
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம் >>The artwork on the wings of butterflies are wonders!
--- LYRICS VIDEO
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம் >>The air travelling through a gap becoming sweet music is a wonder!
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம் >>The cuckoo's song without having a guru is a wonder!
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
>>A wonder to amaze all the other wonders, you are my wonder!
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
>>Before the existence of rocks, mud and oceans... Love was in existence, that is a wonder!
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
>>In the youth of everyone, in the sweet sixteen the ... Blossoming of love is a wonder!
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
>>The bunch of fruits hidden in the flowers are wonders!
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
>>On the scentless branches, look at the fragrant flowers,...... that flower's fragrance is a wonder!
அலைக்கடல் தந்த மேகத்தில் துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
>>The clouds formed by the turbulent ocean bear no iota of salt ..... The rain water is also a wonder !
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
>>Without any electricity, like a floating lamp light, ..... the fireflies light up, that is a wonder!
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே
>>Where is the soul inside the body? Where is love inside the soul?
Think about it. It must be a wonder!
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
>>Before the existence of rocks, mud and oceans... Love was in existence, that is a wonder!
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
>>The bunch of fruits hidden in the flowers are wonders!
பெண்பால் கொண்ட சிறுதீவு கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
>>A small feminine island wandering by her legs .... You are the one - my wonder!
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும் பூவே நீ எட்டாவததிசயமே
>>In this world there are no seven wonders, ..... Including you my talking flower, there are eight wonders!
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
>>Sky coloured eyes, honey splashing cheeks.... Milk drinking your things(*Yes!) are all wonders!
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே நகம் என்ற கிரீடமும் அதிசயமே
>>The fingers of the Damsel are wonders - the nails looking like a crown are wonders too.
அசையும் வளைவுகள் அதிசயமே
Your moving curves are wonder!
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
>>Before the existence of rocks, mud and oceans... Love was in existence, that is a wonder!
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
>>The bunch of fruits hidden in the flowers are wonders!
**(())**
Sung by Sujatha, P. Unnikrishnan
THIS IS ONLY FOR EDUCATIONAL PURPOSES
Source:
https://www.quora.com/What-is-the-exact-translation-of-the-Tamil-song-Poovukul-Adhisayam
..
Thanks to Manikandan Deivarasu for the English translation. (மணிகண்டன் தெய்வராசு) - Slightly (5%) improved
by
Ezhilarasan Venkatachalam
Tamil Based Online English Trainer
Salem.
Comments
Post a Comment