translation - Attending Aekalaivan's meeting at Salem "magilvoor mandram" or Trust
..
சேலம் "மகிழ்வோர் மன்றம்" அல்லது அறக்கட்டளையின் கூட்டத்தில் ஏகலைவன் பேசிய நிகழ்வில் நான் கலந்துகொண்டது.
Diary for all dated : August 01, 2019
அனைவருக்குமான நாட்குறிப்பு
நாள் : 01 ஆகஸ்ட் 2019
(Part 1) / பகுதி 1
It was a great experience attending the function in which my DIFFERENTLY ABLED friend, Aekalaivan gave a special speech at RISHI HALL, Maravaneri, Salem 7.
சேலம் 7 மரவனேரி ரிஷி மண்டபத்தில் எனது மாற்றுத் திறனாளி நண்பர் ஏகலைவன் அவர்கள் சிறப்புரையாற்றிய விழாவில் கலந்து கொண்டது எனக்கு ஒரு சிறப்பான அனுபவம்.
It was organized by Dr. Selvarangam and SALEM MAGHILVOOR MANDRAM. (Salem Happiness Club).
இதை டாக்டர் செல்வரங்கம் மற்றும் சேலம் "மகிழ்வோர் மன்றம்" ஏற்பாடு செய்திருந்தது. (சேலம் ஹேப்பினஸ் கிளப்).
-=-=-=-=-
Are you a "murram" or "jalladai" ?
நீங்கள் முறமா ? அல்லது ஜல்லடையா ? [கீழே]
-=-=-=-=-
My younger daughter dropped me at the venue. I was the first person to enter the hall around 5.55pm.
என் இளைய மகள் என்னை அந்த இடத்தில் இறக்கிவிட்டாள். மாலை 5.55 மணியளவில் மண்டபத்திற்குள் நுழைந்த முதல் நபர் நான் தான்.
It was great to see a few Thirukural books welcoming me at the entrance. There were also a few copies of Aekalaivan's book.
நுழைவாயிலில் சில திருக்குறள் புத்தகங்கள் என்னை வரவேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஏகலைவன் புத்தகத்தின் சில பிரதிகளும் அங்கு இருந்தன.
Everyone who attended the meeting was insisted to talk, even the kids introduced themselves and did some simple performance.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் பேச வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். குழந்தைகள் கூட தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, சில எளிய நிகழ்ச்சிகளை செய்தனர்.
I was so overwhelmed with emotions that I was not able to speak coherently when the mic was given to me.
மைக்கை [ஒலி வாங்கியை] என்னிடம் கொடுத்தபோது என்னால் கோர்வையாக பேசமுடியாமல் உணர்ச்சிகளில் மூழ்கியிருந்தேன்.
Many people used to call doctors as noble persons who save the lives of others.
பலர் மருத்துவர்களை மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் உன்னத மனிதர்கள் என்று அழைக்கிறார்கள்.
But first time I saw a doctor smiling all along and running around like a teenager.
ஆனால் முதன்முறையாக ஒரு மருத்துவர் ஒரு இளைஞனைப் போல சிரித்துக்கொண்டே ஓடியாடி நிகழ்ச்சியை நடத்துவதை அங்கு பார்த்தேன்.
And I could find that he was "prescribing happiness" to all in every act he did.
மேலும் அவர் செய்த ஒவ்வொரு செயலிலும் அவர் அனைவருக்கும் "மகிழ்ச்சியை" கொடுத்துக் கொண்டு இருப்பதை என்னால் காண முடிந்தது.
It is fit that he had founded and is heading an association that wants to "IMPLANT HAPPINESS" in the hearts of people and spread it to others.
மக்களின் இதயங்களில் "மகிழ்ச்சியை" பதித்து, அதை மற்றவர்களுக்குப் பரப்ப விரும்பும் ஒரு சங்கத்தை அவர் நிறுவித் தலைமை தாங்கி நடத்துவது பொருத்தமே!
Recently I posted a scientific article in my blog regarding this.
சமீபத்தில் எனது வலைப்பதிவில் இது தொடர்பாக ஒரு அறிவியல் கட்டுரையின் லிங்க்கை வெளியிட்டேன்.
SMILE AT YOUR FACE IN MIRROR -- ARTICLE LINK
https://e3healthtips.blogspot.com/2021/09/translation-just-smiling-in-mirror.html
It said that even if you watch your own face in the mirror and make a fake smile for ten minutes, then lot of good hormones will secrete in your body.
கண்ணாடியில் நம் முகத்தை பார்த்துக் கொண்டு பத்து நிமிடம் போலியாகச் சிரித்தால் போதும், நம் உடலில் நல்ல ஹார்மோன்கள் சுரக்குமாம். இவ்வாறு அந்த கட்டுரையில் கூறப்பட்டு இருந்தது.
When Dr. Selva rangam said that he was standing in "one leg" for the whole duration of the speech of Aekalaivan, I could not believe it. [45 minutes]
ஏகலைவனின் பேச்சின் முழு நேரமும் "ஒற்றைக்காலில்" தான் நின்றிருந்தேன் என்று டாக்டர் செல்வ ரங்கம் சொன்னதை கேட்டு என்னால் நம்பவே முடியவில்லை. சுமார் 45 நிமிடங்கள் இருக்கும்.
Great thought ! No doubt, I became his fan !
அருமையான சிந்தனை! உடனே, நான் அவருடைய ரசிகன் ஆனேன்!
People generally go to temple to shave their head clean or roll on the floor to fulfil their sangalpaa or the sacred wish.
மக்கள் பொதுவாக கோவிலுக்குச் சென்று தங்கள் தலையை மொட்டையடிப்பது அல்லது தரையில் உருளுவது முதலியவை செய்து தங்கள் சங்கல்பத்தை அல்லது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
But here a good soul wants to stand in one leg as a self-imposed sangalpaa to honour my friend, Aekalaivan.
ஆனால் இங்கே ஒரு நல்ல உள்ளம் என் நண்பன் ஏகலைவனைக் கௌரவிப்பதற்காக சுயமாகத் திணிக்கப்பட்ட சங்கல்பாமாக, ஒற்றைக் காலில் நிற்கிறது.
Great sangalpaa, hats off doctor !!
அருமையான வேண்டுதல், பாராட்டுக்கள் டாக்டர்!!
Aekalaivan had been standing, running and climbing all these 44 years, with just one leg and a crutch and with unimaginable enthusiasm !
ஏகலைவன் இந்த 44 வருடங்களாக ஒரு காலுடனும் ஊன்றுகோலுடனும், நினைத்துப் பார்க்க முடியாத உற்சாகத்துடன் நின்று, ஓடி, ஏறிக் கொண்டிருக்கிறார்!
I hope through him and the new contacts I will be able to give my English knowledge at negligible cost to the needy and enrich their lives.
அவர் மூலமும் அவர் தொடர்புகள் மூலமாகவும் எனது ஆங்கில அறிவை குறைந்த செலவில் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்க முடியும் என்று நம்புகிறேன்.
Part 2 / பகுதி 2
AEKALAIVAN spoke on many things. But he started his speech by asking us to be a "murram" or winnow that "throws away" the husk and unwanted things and not to be a "jalladai" or sieve that "holds back" only the dirt and waste.
ஏகலைவன் பல விஷயங்களைப் பேசினார். ஆனால், உமியையும் தேவையற்ற பொருட்களையும் தூக்கி எறியும் "முறமாக" நாம் இருக்க வேண்டும் என்றும் ...
கழிவுகளை மட்டும் பிடித்து வைத்துக் கொள்ளும் "ஜல்லடையாக" நாம் இருக்க கூடாது என்றும் ....
கேட்டுக்கொண்டு அவர் தனது உரையைத் தொடங்கினார்.
He told about his operation at the G.H. immediately after his train accident.
ஜி எச்சில் ரயில் விபத்துக்குப் பிறகு அவருக்கு உடனடியாக நடந்த அறுவை சிகிச்சை பற்றி கூறினார்.
He also elaborated how he escaped 3 times from death.
மேலும் அவர் மரணத்தில் இருந்து 3 முறை தப்பித்ததையும் விரிவாக எடுத்துரைத்தார்.
He told at the age of 14 years he was run over by a train at Chennai and lay there in the track for hours.
அவர் தனது 14 வயதில் சென்னையில் ரயில் தன் கால் மேல் ஏறியதையும், பல மணி நேரம் தண்டவாளத்தில் அவர் கிடைத்ததாகவும் கூறினார்.
Only after 5 or 6 hours he was taken to the G.H. He told us in a touching voice that was filled with emotions, what happened on that day in the hospital ward.
5 அல்லது 6 மணி நேரத்திற்குப் பிறகுதான் அவர் ஜி.எச். ஆஸ்பத்திரியிற்கு எடுத்துச் செல்லப்பட்டாராம். வார்டில் அன்று நடந்ததை உணர்ச்சிகள் நிறைந்த குரலில் எங்களிடம் கூறினார்.
He told that all the unknown people there, including the patients, took excellent care of him on that day.
அன்றைய தினம் நோயாளிகள் உட்பட அங்கு முகம் தெரியாதவர்கள் பலர் அவரை சிறப்பாக கவனித்துக்கொண்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Then an operation will have to be immediately done to save his life.
அப்போது உடனடியாக அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரைக் காப்பாற்ற செய்ய வேண்டி இருந்தது.
But Aekalaivan, as a young boy was uncooperative and refused for it.
ஆனால் சிறுவனான ஏகலைவன் ஒத்துழைக்காமல் அதற்கு மறுத்துவிட்டார்.
The doctor asked his name and understood that he is a Muslim. Then the doctor went to the nearby mosque and brought in an aged person to the hospital.
மருத்துவர் அவர் பெயரைக் கேட்டு அவர் ஒரு முஸ்லிம் என்பதை புரிந்து கொண்டார். பின்னர் மருத்துவர் அருகில் உள்ள மசூதிக்கு சென்று ஒரு வயதான நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.
Doctor lied to Aekalaivan and said that his uncle had come and finally made Aekalaivan agree for the operation.
ஏகலைவனிடம் உன் மாமா வந்துவிட்டார் என்று டாக்டர் பொய் சொல்லி கடைசியில் ஏகலைவனை அறுவை சிகிச்சைக்கு சம்மதிக்க வைத்தாராம்.
However, that Muslim old man was out of sight of Aekalaivan and he said he could only hear his voice.
எனினும், அந்த முஸ்லீம் முதியவர் ஏகலைவனின் பார்வையில் இல்லை என்றும், அவரது குரல் மட்டுமே தனக்கு கேட்டது என்றும் அவர் கூறினார்.
He was urgently brought in by the doctor to save his life.
அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் அவரை அவசரமாக அழைத்து வந்து உள்ளார்.
After telling many things like this Aekalaivan said that he wanted to do something back to the society.
இப்படிப் பல விஷயங்களைச் சொன்ன ஏகலைவன், சமுதாயத்துக்கு ஏதாவது தான் திரும்ப செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறினார்.
And now Aekalaivan is trying his best to elevate the lives of thousands of DIFFERENTLY ABLED persons in Salem District.
இப்போது ஏகலைவன் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் உயர பல முயற்சி செய்து வருகிறார்.
Every month I send a small amount to his trust.
ஒவ்வொரு மாதமும் அவரது அறக்கட்டளைக்கு ஒரு சிறிய தொகையை அனுப்பி வருகிறறேன்.
You too please try to give him a helping hand.
நீங்களும் அவருக்கு உதவ முயற்சி செய்யுங்கள்.
PHOTOS AND TRUST ACTIVITIES - Facebook -
https://m.facebook.com/nambikkaivaasal.trust
BANK DETAILS
------------------------------
Name - NAMBIKKAI VAASAL TRUST
A/c No -1186115000019668
IFSC --- KVBL0001186
Bank -KARUR VYSYA BANK
(Salem Main Branch, Salem - 1)
------------------------------
NAMBIKKAI VAASAL TRUST
1 / 357, Kullam Patti Perivu Road [Near Bus Stop], Belur Road, Ayothiyapattinam, Minnam palli P.O.
Salem 636 103.
Contact :
984 297 4697
868 299 4697
Ezhilarasan Mobile
WhatsApp - 99526 60402
Voice : 861080 2637
Ezhilarasan Venkatachalam,
Tamil based English Trainer, Salem.
எழிலரசன் வெங்கடாசலம்,
தமிழ் வழி ஆங்கிலப் பயிற்சியாளர்,
சேலம்.
Comments
Post a Comment