Diary : // நாட்குறிப்பு:
25, April, 2018. (PUBLIC VERSION)
25, ஏப்ரல், 2018. (பொது பதிப்பு)
Friends, Let me narrate an unforgettable day's happening !!
நண்பர்களே மறக்க முடியாத ஒரு நாள் நடந்ததைச் சொல்கிறேன், இன்று!!
Today I went to my younger daughter's ENGINEERING college ABCDE, Salem.
இன்று நான் சேலத்தில் உள்ள எனது இளைய மகளின் ABCDE பொறியியல் கல்லூரியிற்கு சென்றேன்.
It was to pay the Fees and thank the college Secretary, Smt. LALITHA KUMARI (name changed) for her timely support given to us.
அன்று கட்டணம் செலுத்த கல்லூரி சென்றேன். மேலும் செயலாளர் ஸ்ரீமதி. லலிதா குமாரியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்க்கவும், எங்களுக்கு சரியான நேரத்தில் அளித்த ஆதரவிற்காக நன்றி கூறவும் சென்றேன்.
It seems all these 4 years she had been a great FAN of my younger daughter, Saroja (name changed).
இந்த 4 வருடங்களாக அவர் எனது இளைய மகள் சரோஜாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறந்த ரசிகராக இருந்ததாகத் தெரிகிறது.
Therefore, after I gave the fees to her, she started to praise my daughter. I was very elated.
ஆகையால், நான் அவரிடம் கட்டணத்தைக் கொடுத்த பிறகு, அவர் என் மகளைப் புகழ்ந்து பேச ஆரம்பித்தாள். இதை கண்டு நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன்.
She even told, if my daughter agrees, she is ready to offer her a job in her college after completion of B.E.
என் மகள் சம்மதித்தால், பி.இ.யை முடித்தவுடன் அவருடைய கல்லூரியில் வேலை கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.
part 2 // பகுதி 2
Since madam was very casual, I started to narrate one or two real life pranks that my younger daughter did, when she was a child.
மேடம் மிகவும் சாதாரணமாக இருந்ததால், என் இளைய மகள் சிறுவயதில் செய்த ஒன்றிரண்டு குறும்புகளை நான் சொல்ல ஆரம்பித்தேன்.
I told madam they are readily available as detailed article in my SOFT SKILL BLOG.
எனது மென் திறன் வலைப்பதிவில் விரிவான கட்டுரையாக அதை உடனடியாகக் பார்க்க்கலாம் என்றும் மேடமிடம் கூறினேன்.
Then I gave my mobile phone and made her read an article. She liked the article and was not in a hurry to close our discussion at all.
பிறகு என் கைபேசியைக் கொடுத்து அவரை ஒரு கட்டுரையைப் படிக்க வைத்தேன். அவர் கட்டுரையை விரும்பினார், மேலும் எங்கள் பேச்சை முடிக்க அவர் அவசரப்படவில்லை.
So as a true "guru" of my daughters, I started narrating incident after incident about how I meticulously reared them.
எனவே எனது மகள்களின் உண்மையான "குரு" என்ற முறையில், நான் அவர்களை எப்படி உன்னிப்பாக வளர்த்தேன் என்பது பற்றிய சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தேன்.
part 3 // பகுதி 3
All along I was thinking that any time my daughter may prompt me not to prolong the talk. But she didn't do that.
எந்த நேரத்திலும் என் மகள் என் பேச்சை நீட்டிக்க வேண்டாம் என்று எனக்கு சமிக்ஞை கொடுக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் அவள் அதைச் செய்யவில்லை.
So I went on chatting. I felt very relaxed chatting with her.
அதனால் நான் அரட்டையை தொடர்ந்தேன். அவருடன் நான் பேசுவதில் நான் மிகவும் ரிலாக்ஸ்டாக இருப்பதை உணர்ந்தேன்.
I even made her hear my 3rd standard live kids class audio recording done at Muthu Naickenpatty school (QRST MATRICULATION) through my cellphone.
முத்து நாய்க்கன்பட்டி பள்ளியில் (QRST MATRICULATION) பதிவு செய்த எனது 3ஆம் வகுப்பு நேரடி குழந்தைகள் வகுப்பு ஒலிப்பதிவை என் செல்ஃபோன் வழியாக
அவரை கேட்கச் செய்தேன்.
She was all smiles, sincerely and leisurely sharing many points on parenting, present day students attitude etc.
பெற்றோர்கள், இன்றைய மாணவர்களின் மனப்பான்மை போன்ற பல விஷயங்களை நிதானமாகவும் உண்மையாகவும்
என்னிடம் சிரித்த முகத்துடன்
பகிர்ந்துகொண்டார்.
She then enquired what they paid me in that village school. I said it was a PITTANCE. I just went there to get GOOD contacts.
அப்போது அந்த கிராமப் பள்ளியில் எனக்கு என்ன சம்பளம் கொடுத்தார்கள் என்று விசாரித்தார். நான் அது ஒரு பாட்டாளி கடலையிற்கு சமம் என்று சொன்னேன். நல்ல தொடர்புகளைப் பெறுவதற்காகத் தான் நான் அங்கு சென்றேன் என்றேன்.
part 4 // பகுதி 4
See now this THREE MINUTES LIVE AUDIO RECORDING of school kids tells you more about my PASSION than anything else.
பள்ளிக் குழந்தைகளின் இந்த மூன்று நிமிட லைவ் ஆடியோ பதிவு, எல்லாவற்றையும் விட எனது ஆசிரியர் ஆர்வத்தைப் பற்றி உங்களுக்கு தெளிவாகச் சொல்கிறது இல்லையா ? என்றேன்.
It seems an interview was going on for Soft Skill Trainers in their college. She had in fact conducted an interview for me WITHOUT MY KNOWLEDGE for that post !
அவர்களின் கல்லூரியில் சாஃப்ட் ஸ்கில் பயிற்சியாளர்களுக்கான நேர்காணல் நடந்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அந்த பதவிக்காக எனக்கு தெரியாமலேயே எனக்கு நேர்காணல் நடத்திவிட்டார் !
When I came out after meeting her I came to know through a staff that she is "considering" me as a SOFT SKILL TRAINER for next academic year (inside college and outside too).
நான் அவரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது, அடுத்த கல்வியாண்டில் (கல்லூரிக்கு உள்ளேயும் வெளியிலும்) என்னை ஒரு சாஃப்ட் ஸ்கில் டிரெய்னராக வேலையில் அமர்ந்த அவர் "கருதுகிறார்" என்று ஒரு ஊழியர் மூலம் தெரிந்துகொண்டேன்.
Like CSR (CORPORATE SOCIAL RESPONSIBILITY) for corporates they have in colleges, ISR ...Institute Social Responsibility.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கம்பனிகள் செய்ய வேண்டிய சமூக பொருப்பு செயல்கள் (CSR -- CORPORATE SOCIAL RESPONSIBILITY) என்று இருப்பது போல,
கல்வி நிறுவனங்களின் சமூக பங்களிப்பு செயல்கள் என்று ஒன்று உள்ளதாம். PISR -- Institute Social Responsibility).
part 5 // பகுதி 5
Through that project they are reaching out to villages and taking direct classes and other enlightening activities for the public.
அந்தத் திட்டத்தின் மூலம் அவர்கள் கிராமங்களைச் சென்றடைந்து, பொதுமக்களுக்கு நேரடி வகுப்புகள் மற்றும் பிற அறிவூட்டும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
The above is only a part of my mind-boggling interaction with Smt. LALITHA KUMARI, Secretary today.
மேற்கூறியவை இன்று செயலாளர் ஸ்ரீமதி லலிதா குமாரி உடனான எனது மனதைக் கவரும் பேச்சின் ஒரு பகுதி மட்டுமே.
Later browsing the net I discovered that Smt.LALITHA KUMARI is a Gold medalist from SONA College, Salem.
பிறகு ஸ்ரீமதி. லலிதா குமாரி, சேலத்தில் உள்ள சோனா கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பதை இன்டெர்நெட்டில் தேடிக் கண்டுபிடித்ததேன்
அது ஒரு மறக்க முடியாத நாள்!!
எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்
It was an unforgettable day !!
EZHILARASAN Venkatachalam
Salem
Tamil Based English Trainer
Comments
Post a Comment