Skip to main content

Indebted to DR.SVS SALEM

translation - I am indebted to Dr S V Soundarajan, MBBS, D.Ortho டாக்டர் எஸ் வி சௌந்தரராஜன், எம்பிபிஎஸ், டி.ஆர்த்தோவுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். 


Friends, Today I am going to elaborate about my unforgettable encounters with Dr.SVS or Dr.S.V.Soundarajan. /நண்பர்களே, இன்று நான் டாக்டர்.எஸ்.வி.எஸ் அல்லது டாக்டர்.எஸ்.வி.சௌந்தரராஜனுடனான எனது மறக்க முடியாத சந்திப்புகளைப் பற்றி விரிவாக கூறப் போகிறேன்.

He was one of the doctors who talks with patients with a smiling face and a soothing voice. Basically he was a good human being.  /சிரித்த முகத்துடனும், இனிமையான குரலுடனும் நோயாளிகளுடன் உரையாடும் மருத்துவர்களில் இவரும் ஒருவர்.  அடிப்படையில் அவர் ஒரு நல்ல மனிதர்.

About me - I am a Polio paralysis victim /என்னைப் பற்றி -- நான் போலியோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவன்
Let me tell about my exact health problem before I proceed further. / நான் மேலும் தொடர்வதற்கு முன் எனது உடல்நலப் பிரச்சனை பற்றி விரிவாக கூறுகிறேன். 

I am a polio victim since the age of 3 years. My right limbs are affected by polio paralysis. /நான் 3 வயதில் இருந்து போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளேன்.  எனது வலது கை கால்கள் போலியோ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

Hence,  I can use my right hand only about 15% percent and my right leg about 60%. /எனவே, எனது வலது கையை 15% மற்றும் வலது காலை 60% மட்டுமே என்னால் பயன்படுத்த முடியும்.

However, I overcame my physical disability and achieved many things in my life. Details given at the bottom. /இருப்பினும், நான் எனது உடல் ஊனத்தை சமாளித்து, வாழ்க்கையில் பலவற்றை சாதித்து உள்ளேன். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

For all my inquisitive questions he will calmly answer with a smiling face. /என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் அவர் சிரித்த முகத்துடன் நிதானமாக பதில் அளிப்பார்.
Very soon, he understood that I grasped the fundamental point in my health problem 100%. /மிக விரைவில், எனது உடல்நலப் பிரச்சனையின் மையப் புள்ளியை நான் 100% புரிந்துகொண்டேன் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

He would casually say, "SEE, YOU HAVE COMPLETELY UNDERSTOOD YOUR PROBLEM. AFTER ALL YOU HAD CROSSED ALMOST 25 YEARS WITH YOUR PROBLEM.  /அவர் சாதாரணமாகச் சொல்வார், "பார், உங்கள் பிரச்சனையை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டீர்கள். நீங்கள் உங்கள் பிரச்சனையுடன் கிட்டத்தட்ட 25 வருடங்கள் உங்கள் வாழ்க்கையை கடந்துவிட்டீர்கள்

... PROCEED IN YOUR WAY. YOU ARE RIGHT. YOU KNOW BETTER ABOUT YOURSELF"./... உங்கள் வழியில் தொடருங்கள். நீங்கள் எப்போதும் சரியாக தான் இருக்கிறீர்கள்".

Very few doctors say those words, "YOU KNOW ABOUT YOUR BODY BETTER"./ "உங்கள் உடலைப் பற்றி உங்களுக்கு தான் நன்றாகத் தெரியும்" என்ற வார்த்தைகளை மிகச் சில மருத்துவர்களே கூறுகிறார்கள்.

I was an active TT or Table Tennis player in my teenage. /நான் என் பதின்ம வயதில் ஒரு  சுறுசுறுப்பான டீ. டீ. அல்லது டேபிள் டென்னிஸ் வீரராக இருந்தேன்.  

Once for my query asking whether I should reduce my sports activities, he said the following : /ஒருமுறை எனது விளையாட்டு நடவடிக்கைகளை குறைக்க வேண்டுமா என்று கேட்டதற்கு, அவர் பின்வருமாறு பதில் கூறினார்:

"YOU SHOULD ENJOY YOUR LIFE, DOING WHATEVER YOU LIKE TO DO. / "நீங்கள் உங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.  நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதை தாராளமாக  செய்யுங்கள். 

JUST REMEMBER TO HAVE A CONSTANT CHECK ON YOUR WEIGHT. /ஆனால் உங்கள் எடையை   தொடர்ந்து சரிபார்க்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்."

EVEN IF YOU INCREASE A KILOGRAM IN WEIGHT (OR DECREASE ) IT IS EQUAL TO TEN KILOGRAMS INCREASE (OR DECREASE) OF A NORMAL PERSON. /நீங்கள் ஒரு கிலோகிராம் எடை  அதிகரித்தாலும் (அல்லது குறைந்தாலும்) அது ஒரு சாதாரண நபர் பத்து கிலோகிராம் அதிகரித்ததற்கு சமம்  (அல்லது குறைவதற்கு சமம்). 

SO WATCH YOUR WEIGHT. ENJOY LIFE".

/எனவே உங்கள் எடையை கவனமாக பார்த்துக் கொள்ளவும். வாழ்க்கையை அனுபவிக்கவும்".

Just before my marriage, I met him with lot of queries. A major question was, "Whether I can get married or not?" /என் திருமணத்திற்கு முன்பு, நான் அவரை நிறைய கேள்விகளுடன் சந்தித்தேன்.  அதில் "நான் திருமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா" என்பது ஒரு முக்கியமான கேள்வி.

He coolly said, "Yes, I feel one should get married to have a FULLNESS IN LIFE." /அவர் கூலாக, "ஆமாம், வாழ்க்கையில் முழுமை பெற ஒருவர் அவசியம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்."

I remember once meeting him after reading a bone growth method called "ELIZARO". /எலிசாரோ - "ELIZARO" என்ற எலும்பு வளர்ச்சி முறையைப் படித்துவிட்டு ஒருமுறை அவரைச் சந்தித்தது நினைவுக்கு வந்தது

It was narrated in an article in the weekly magazine, "THE WEEK". / "வீக்" என்ற ஆங்கில வார இதழில் ஒரு கட்டுரையில் இது விவரிக்கப்பட்டு இருந்தது.

He casually told, "HEY, MAN, I HAD ALREADY STUDIED ABOUT IT, IN MY D.ORTHO COURSE. OF COURSE, YOUR BONES WILL GROW ONE INCH LONGER BY THIS METHOD. / அவர் சாவகாசமாக, "நண்பரே, நான் ஏற்கனவே எனது டி. ஆர்தோ -D.ORTHO  படிப்பில் அதைப் பற்றிப் படித்திருக்கிறேன். நிச்சயமாக, இந்த முறையால் உங்கள் எலும்புகள் ஒரு அங்குலம் நீளமாக வளரும்.

BUT DO YOU THINK, YOUR MUSCLES AND NERVES WITH WITHSTAND THE ELONGATION? DEFINITELY NO./ ஆனால், உங்கள் தசைகள் மற்றும் நரம்புகள் அந்த நீட்சியைத் தாங்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயம் தாங்காது. 

I THINK, YOUR MOVEMENT MAY GET REDUCED DRASTICALLY. HENCE, I DON'T RECOMMEND THAT FOR YOU."/அதனால் உங்கள் இயக்கம் இப்போது இருப்பதை விட வெகுவாகக் குறைக்கப்படலாம்.  எனவே, நான் அதை உங்களுக்காகப் பரிந்துரைக்க மாட்டேன்."

After hearing that, I blessed him in my mind./அதைக் கேட்டதும் மனதிற்குள் அவரை ஆசிர்வதித்தேன்.

"OH, THIS MAN SEEMS LIKE GOD TO ME NOW. MAY GOD GIVE ALL THE VIRTUES HE DESERVES"./ "ஓ, இந்த மனிதர் இப்போது எனக்கு கடவுளாகத் தோன்றுகிறார். கடவுள் அவருக்குத் தகுதியான அனைத்து நலன்களையும் கொடுக்கட்டும்".

Thereafter, I never considered myself a physically challenged person./ அதன்பிறகு, நான் ஒருபோதும் என்னை ஒரு உடல் ஊனமுற்ற நபராகக் கருதியதே இல்லை. 

I always devised ways to overcome my handicap or physical limitations./ எனது குறைபாடுகள் அல்லது உடல் வரம்புகளை சமாளிப்பதற்கான வழிமுறைகளை நான் எப்போதும் வகுத்துக் கொள்வேன். 

I  even recall taking paid computer classes to him in his house around 1995-99./ 1995-99 வாக்கில் அவர் வீட்டில் அவருக்குக் கட்டணம் பெற்று கணினி வகுப்புகளை நடத்தியது எனக்கு நினைவிருக்கிறது.

I am indebted to Dr S V Soundarajan, MBBS, D.Ortho, for what I am today./ இன்று நான் நல்லபடி இருப்பதற்கு நான் டாக்டர் எஸ் வி சௌந்தரராஜன், எம் பி பி எஸ், டி ஆர்தோ அவர்களுக்குக் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

I am also indebted to good friends like Shabbir, M.S.Prakash, Asgari, Manohar, Sabhari and Radhakrishnan -- who in one way or the other keep my spirits up.  (And other HCMS78 guys and friends too). / ஷபீர், எம்.எஸ்.பிரகாஷ், அஸ்கரி, மனோகர், சபரி மற்றும் ராதாகிருஷ்ணன் போன்ற நல்ல நண்பர்களுக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் -

இவர்கள் அனைவரும் ஏதாவது  ஒரு வழியில் என்னை எப்போதும் உற்சாகப்படுத்துக் கொண்டே இருப்பவர்கள். (மற்றும் பிற எச் சி எம் எஸ் 78 தோழர்களும் மற்ற  தோழர்களும் கூட).

Ezhilarasan Venkatachalam
Tamil Based Online English Trainer,
Salem, South India

 

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are expected பெண் :

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song .. BIRDS EYE VIEW of Ezhilarasan VENKATACHALAM's works .. அறிமுகம் -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி —  பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு --என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. =_=_=_=_=_=_=_=_=_=_=_=_ Introduction  :  Friends, Tamil poet Barathiyar's poems will ignite our minds and fill our hearts with tons of self confidence. It was my long time wish to translate some of them. Here is my translation of " thaedi sooru nitham thindru "  as best as I could do. ................................................. // Thaedi choru nitham thindru  Translation Venkatachalam Salem Barathiyar song ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம்

Translation sandwich -- MY ROAD ACCIDENT AND HOW MS.SHIVANI GUPTHA INSPIRED ME

My road accident and how Ms. Shivani gupta inspired me என் சாலை விபத்தும் ஷிவானி குப்தா எனக்கு கொடுத்த பெரிய ஊக்கமும். -- -- .. ONLINE ENGLISH CLASSES   through TAMIL / ஆன்லைன் ஆங்கில பயிற்சி ..  I am indebted to Ms. Shivani Guptha, a wheelchair confined lady, who gave new energy to my life in May 2007. /  ஒரு சக்கர நாற்காலியுடன் தன் வாழ்க்கையை கழிக்கும் ஷிவானி குப்தா, மே 2007~இல் எனக்கு ஒரு பெரிய ஊக்கத்தை கொடுத்தார். அதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டு உள்ளேன். Friends, On 12th April 2007 at 9.30 pm I met with a road accident. I had two fractures, one on my right leg and another on my right hand . /  நண்பர்களே, ஏப்ரல் 12 ஆம் தேதி 2007 அன்று இரவு  9.30 மணியளவில் நான் ஒரு சாலை விபத்தை சந்தித்தேன். அதில் எனக்கு இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. என் வலது காலில் ஒன்று, என் வலது கையில் மற்றொன்று. I have a six inch steel or alloy implant in my right thigh even today. I was lucky enough to get immediate medical attention./ பிறகு என் வலது தொடையில் ஒரு ஆறு அங்குல எஃகு அல்லது "