ஒரு நாள் ஒரு ஒட்டகத்தை சந்தையில் தீவிரமாக பேரம் பேசி ஒரு வியாபாரி வாங்கினார். ஒட்டகத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பின் வேலைக்காரன் உதவியுடன் அதன் மேல் இருந்த சேணத்தை கீழே இறக்கிறான். அதில் ஒரு அழகிய வெல்வெட் பையில் விலை உயர்ந்த கற்கள் சில இருந்தது. உடனே அதை திருப்பி தர சந்தையிற்கு புறப்பட்டார். வேலைகாரனோ அவரை தடுக்க முயன்றான். இருந்தாலும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
சந்தையில் அந்த வியாபாரியை சந்தித்து விவரத்தை கூறினார். பின் அந்த பையை அவரிடம் கொடுத்தார். இதற்கு பிரதிபலனாக அவர் ஒரு சில கற்களை இவருக்கு கொடுக்க முன் வந்தார். ஆனால், "நான் ஒட்டகத்திற்கு தான் காசு கொடுத்தேன் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு வேண்டாம்" என்று கூறி மறுத்துவிட்டார்.
அந்த ஒட்டக வியாபாரியோ இவரை வர்ப்புறுத்திக் கொண்டே இருந்தார். ஆகையால் அவரிடம், "நான் அந்த பையில் இருந்து இரண்டு கற்களை ஏற்கனவே எடுத்துக் கொண்டேன்" என்றார். அவசர அவசரமாக அந்த வியாபாரி பையில் இருந்த கற்களை எடுத்து எண்ணிப்பார்த்தார். பின், "இல்லையே இதில் ஒரு கல் கூட குறையவில்லையே எந்த கற்களை எடுத்தீர்கள்" என்றார்.
அதற்கு, "நேர்மை மற்றும் சுய மரியாதை" என்ற இரண்டையும் தான்" என்றார்.
தமிழ் மொழிபெயர்ப்பு (எளிமையாக)
எழிலரசன் வெங்கடாசலம்
தமிழ் வழி ஆங்கில ஆசிரியர்
சேலம்
இதன்ஆங்கில மூலத்தை படிக்க ஆசை இருந்தால் ...
Original English version ..
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer
Salem.
Comments
Post a Comment