Skip to main content

Translation SANDWICH My travelling experience to GRMATRIC a village school Venkatachalam Salem

 Translation Village school travelling experience

ஒரு கிராம பள்ளியில் சிறப்பு ஆசிரியராக நான் பணி செய்த மறக்க முடியாத சுக அனுபவம் பற்றி (33 நாட்கள்) -- சுருக்கப்பட்ட பதிப்பு.


From January 15, 2018 till March 15, 2018, I worked in a village school G.R.MATRICULATION,  Muthunaicken patty. It was 15 kms from Salem. I worked  there for about 33 days as a special English Trainer.

ஜனவரி 15, 2018 மற்றும் மார்ச் 15, 2018 முதல், முத்து நாய்க்கன் பாட்டியில் உள்ள  ஜி.ஆர்.மெட்ரிகுலேஷன் பள்ளி் என்ற கிராமப் பள்ளியில் 33 நாட்கள்  பணியாற்றினேன். அது சேலத்திலிருந்து 15 கி.மீ தொலைவு. நான் அங்கு ஒரு சிறப்பு ஆங்கிலப் பயிற்சியாளராக பணியாற்றினேன்.

Daily I took classes for 2.5 hours. I worked only 3 days a week. However, from morning 9.30am to 4pm, I was engaged. It was an unforgettable and enjoyable experience.

அங்கு தினமும் நான் 2.5 மணி நேரம் வகுப்புகள் எடுத்தேன். நான் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே அங்கு வேலை செய்தேன். இருப்பினும், காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நான் இதற்காக என் நேரத்தை ஒதுக்கீடு செய்தேன்.

இங்கு வேலை செய்தது எனக்கு ஒரு மறக்க முடியாத இனிய அனுபவம் ஆகும்.

I should thank the correspondent Mr.G.R.Narayanan for giving me the opportunity and hundred percent freedom to try out my method. ***

பள்ளி தாளாளர் திரு.  MR.G.R.NARAYANAN   எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கும் மற்றும் எனக்கு அங்கு நூறு சதவீதம் சுதந்திரம் கொடுத்ததற்கும் நன்றி கூற வேண்டும்.
-=-

Of course, daily it was a dare-devil travelling experience in the town bus. *** தினசரி நிச்சயமாக என் உயிரை பயணம் வைக்கும் ஒரு சாகச பயண அனுபவம் தான் அது.

With great alertness and mental stamina, I travelled in the public transport using my walking stick and a one foot long banian loop. - பெரும் உஷார் நிலையுடனும் அதிக மன  உறுதியுடனும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி நான் அங்கு பயணம் செய்தேன். என் ஊன்றுகோலையும்  பனியன் துணியால் செய்த ஒரு அடி  வளையமும் தான் என் துணை.

Then my brother was retired and at home. Daily he used to drop me at Chatram Bus Stop near my house at 9.30 am. - அப்போது என் சகோதரர் ஓய்வு பெற்று  வீட்டில் இருந்தார். தினமும் காலை 9.30 மணியிற்கு அவர் என் வீட்டின் அருகில்  இருக்கும் பஸ் நிறுத்தத்தில் என்னை இறக்கி விடுவார் (chatram bus stop).
Immediately I will set an alarm in my mobile.  Just 5 minutes before the bus time, as soon as my alarm beeps, I will move out of the shade and cross the road and wait for my bus in the sunlight. - உடனே நான்  என் மொபைல் ஃபோனில் ஒரு அலாரம் (எச்சரிக்கை மணி) இயக்கி வைப்பேன். சரியாக பஸ் வர 5 நிமிடங்கள் முன் என் மொபைல் அலாரம் "பீப்.. பீப்" என் ஓசை எழுப்பும். உடனே நான் நிழலில் இருந்து வெளியே வந்து சாலையைக் கடந்து  சூரிய ஒளியில் பஸ் நிற்கும் இடத்திற்கு செல்வேன்.
There I will be ready like an ASTRONAUT boarding a SPACE CRAFT,  alert and pacing up and down the road. - அங்கு நான் உசாராக, ஒரு விண்வெளி வீரரை போல தயாராக காத்திருப்பேன். ஓர் இடத்தில் நிற்காமல் சாலை ஓரத்தில் மேலும் கீழும் நடந்து கொண்டே இருப்பேன்.

One route bus NO.8 (SANTHI) will come there at jet speed. - சரியான நேரத்தில் மின்னல் (ஜெட்)  வேகத்தில்  பஸ் ரூட்.  எண் .8 (santhi) அங்கு வந்து நிற்கும்.

With meticulously calculated steps -- both in timing and speed,  I will walk up to the bus. - மிகவும் கவனுத்துடனும் சரியாக வேகத்துடன்  கணக்கிடப்பட்ட கனகச்சிதமான அடிகள் எடுத்து வைத்து, நான் பஸ் அருகில் செல்வேன்.

When the hand rails of the bus steps are within my reach, I will hang my walking stick in my banian loop cloth in my right hand and board the bus in a fraction of a second. - பஸ்ஸின் படிகட்டு கைபிடி எனக்கு தொடும் தூரம் இருக்கும் போது, கண் இமைக்கும் நேரத்தில், என் ஊன்றுகோலை என் வலது கை தோள்பட்டையில் இருக்கும் சிறிய வட்ட வடிவ பணியன் துணியில் (லூப்) மாட்டிவிடுவேன்.

I will not try to board or get down from the bus until it comes to a standstill. Or else I will ask for it. - பஸ் ஆடாமல் அசையாமல் நிற்கும் வரை நான் பஸ்ஸில் ஏறவும் மாட்டேன்  இறங்கவும் முயற்சி செய்ய மாட்டேன் . மாறாக கண்டக்டரிடம் பஸ்ஸை நிறுத்த கூறுவேன்.

At the beginning, the bus conductor used to arrange a seat for me.  But after a few days, he observed how comfortable I was moving inside the speeding bus. - ஆரம்பத்தில், பஸ் கண்டெக்டர் நான் ஏறிய உடனே எனக்கு ஒரு இருக்கையை ஏற்பாடு செய்வார். ஆனால் ஒரு சில நாட்களுக்கு பிறகு,  என்னால் வேகமாக ஓடும் பஸ்ஸில் பயம் இல்லாமல் அங்கும் இங்கும்  சுலபமாக நகர முடிகிறது என்று அவர் அறிந்தார்.

Therefore, his scare that I may get injured vanished and he considered me just like any other able-bodied passenger. - 
எனவே, நான் கீழே விழுந்து காயம் அடைந்து விடுவேன் என்று என் மேல் உள்ள அவரது பயம் மறைந்துவிட்டது. என்னையும் மற்ற (உடல் நிலை நன்கு உள்ள) பயணிகள் போல்  கருத ஆரம்பித்தார்.

From Chatram bus stop, the bus will travel for about 45 minutes to reach my school bus stop. - நான் ஏறிய (chatram) பஸ் நிறுத்ததில் இருந்து பேருந்து என் பள்ளி பஸ் நிறுத்தத்தை அடைய 45 நிமிடங்கள் பயணம் செய்யும்.

The first 30 minutes will be in the hectic city traffic. It will go via Salem Junction, then take a right turn and then an "U turn" to reach the Steel Plant Road. Then after about 30 minutes, it will make a perpendicular right turn at the Muthunaiken patti approach road. - முதல் 30 நிமிடங்கள் பரபரப்பாக நகரம் போக்குவரத்து. சேலம் ஜங்சன் (ரயில்வே சந்திப்பு), வழியாக செல்லும். பின்னர் வலது பக்கம் திருப்பி, ஒரு "யூ" திரும்ப செய்து ஸ்டீல் பிளாண்ட் ஆலை சாலையில் நெடு நேரம் செல்லும்.  இப்படி சுமார் 30 நிமிடங்கள் செல்லும். பிறகு ஒரு வலது பக்கம் திரும்பி முத்துநாய்க்கன் பட்டி செல்லும்  சாலையை அடையும்.

As soon as the bus enters the road,  the environment will change. I will get the pleasant smell of the damp fields on both sides of the road. - பஸ் அந்த சாலையில் நுழைந்த உடனே சுற்றுச்சூழல் மாறும். இருபுறமும் உள்ள ஈரமான வயல்கள் இனிய வாசனை வரும்.

And cool breeze will be coming into the bus. Of course, most of the people on the bus will be village guys. I used to calmly enjoy everything going around me. - மற்றும் குளிர் காற்று வீசும். பஸ்ஸில் இப்போது இருக்கும் பெரும்பாலான மக்கள் கிராம தோழர்களே. நான் அமைதியாக என்னை சுற்றி உள்ள எல்லாற்றையும் அனுபவிப்பேன்.

The bus will be snaking its way at good speed. My stop is just before the terminus, MUTHU Naickennpatty. After about 15 minutes travel in this road, it will cross a Petrol Station. My stop for the G.R.Matriculation school will be a few stops away. - பேருந்து நல்ல வேகத்தில் பாம்பு போல வளைந்து வளைந்து செல்லும். கடைசி  நிறுத்தம் தான் முத்துநாய்க்கன் பட்டி.  அதற்கு முன் நிறுத்தம் என் பள்ளி நிறுத்தம். பிறகு 15 நிமிடங்கள் பயணம் செய்த பின் ஒரு பெட்ரோல் நிலையம் வரும்.  ஒரு சில நிறுத்தங்கள் விட்டு என் பள்ளி நிறுத்தம் வரும்.

Immediately, I will stand up, utilizing a small lift or jolt in the bump in the road. - உடனே நான் எழுந்து விடுவேன் -- சாலையில் வரும் ஒரு சிறிய அதிர்ச்சியை பயன்படுத்தி.  
 
I will stand for a while to ensure that my leg muscles relax a bit and cooperate when I get down. - ஓய்வெடுத்த என் கால் தசைகள் நான் கீழே இறங்கும் போது எனக்கு ஒத்துழைக்க வேண்டும். அதற்காக நான் சற்று நேரம் நிற்பேன்.

Of course, immediately I will hang my walking stick in the banian or vest loop cloth. - உடனடியாக நான் என் கைத்தடியை என் தோளில் இருக்கும் "லூப்" போன்ற துணியில் மாட்டி விடுவேன்.

As my bus-stop approaches, I will casually and confidently move to the front entrance of the bus. The driver should be able to see me and cooperate too. - என் பஸ் நிறுத்தத்திற்கு அருகே செல்லும்போது நான் பேருந்தின் முன் நுழைவாயில் அருகே சாதாரணமாகவும் நம்பிக்கையுடன் செல்வேன். ஓட்டுனர் என்னை பார்க்கக் கூடிய இடத்தில் நான் நிற்க வேண்டும். அப்போது தான் அவர் பஸ்ஸை சரியாக இயக்கி எனக்கு இறங்க ஒத்துழைக்க முடியும்.

In the meanwhile many "newcomers" in the bus will be amazed to see me moving around very confidently in a fast moving bus, with a dangling walking stick in my shoulder. - இதற்கிடையில் பஸ்ஸில் உள்ள பல புதுமுகங்கள் ஒரு தோள்பட்டையில் தொங்கும் கைத்தடியுடன் வேகமாக நகரும் பஸ்ஸில், நான் நம்பிக்கையுடன் நகர்வதை பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

Some will offer to help me.  However, I will have to politely say "I am comfortable, please don't worry". - சிலர் நான் உட்கார "சீட்"  வழங்க முன் வருவார்கள். எனினும், "நான் சௌகரியமாகத் தான் உள்ளேன், தயவு  செய்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்" என்று அமைதியாக அவர்களிடம் சொல்வேன்.

When the bus had almost reached my bus-stop, I will start climbing down the steps and get ready to get down. I will not mind to the conductor's warning. - பஸ் கிட்டத்தட்ட என் பஸ் ஸ்டாப்பை அடைந்த பின் நான் படிகளில் கீழே இறங்க ஆரம்பிப்பேன். கண்டெக்டர் "வேண்டாம்" என்று எச்சரிக்கை செய்வதை நான் பொருட்படுத்த மாட்டேன்.

The bus will stop only for one or two seconds.  And passengers are expected to get down in that time slot. Or else they will start scolding us. - பேருந்து ஒன்று அல்லது இரண்டு விநாடிகள் மட்டுமே நிறுத்தில் நிற்கும். அந்த குறைந்த நேர இடைவெளியில் பயணிகள் கீழே இறங்கி விட வேண்டும் என்று ஓட்டுனர் எதிர்பார்ப்பார். அல்லது நம்மை திட்ட தொடங்கி விடுவார்.

After a few days the bus driver and conductor came to know that I am working a a teacher in a school, they offered to provide a special stop for me near the school. But I never insisted for it. - ஒரு சில நாட்களுக்கு பிறகு பேருந்து ஓட்டுனர் மற்றும் கண்டெக்டர் நான் ஒரு பள்ளி (சிறப்பு) ஆசிரியராக வேலை செய்வது அறிந்து, எனக்காக ஒரு சிறப்பு நிறுத்தம் பள்ளி அருகில் வழங்க முன்வந்தார்கள். ஆனாலும் நான் ஒருபோதும் அதை வலியுறுத்தியது  இல்லை.

I will have to walk about 6 minutes to reach the school say about 11am. - 11 மணிக்கு பள்ளியை அடைய நான் இறங்கிய பின் 6 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

Daily I took there classes for 2.5 hours generally between 11.30 am and 2.45 pm.  Then i will rush back by 3 pm to catch the same bus on its return  trip back. - நான் அங்கு தினமும் 2.5 மணி நேரம் வகுப்புகள் எடுப்பேன். (11.30am முதல் 2.45pm வரை). பின்னர் நான் 3pm பஸ் பிடிக்க வேக வேகமாக திரும்பி நடப்பேன்.   அதே  ரூட் பஸ்ஸில் வீடு நோக்கி மீண்டும் பயணம்.

More ... about what happened "inside the school" later. --Ezhilarasan Venkatachalam.

மேலும் ... " பள்ளி உள்ளே " என்ன நடந்தது பற்றி பின்னர் எழுதுகிறேன். -- எழிலரசன் வெங்கடாசலம்

LIVE CLASS AT GR MATRICULATION

3 rd Std lesson THE NEXT TIME : 
.................................Part 1 .. VIDEO 237

https://www.youtube.com/watch?v=fjMrAf5aAWU

.................................: Part 2 .. VIDEO 238
https://www.youtube.com/watch?v=Jqge3LkC2cI

...............................Vocabulary.. VIDEO 239
https://www.youtube.com/watch?v=qCkLZ5t9IGE
*


Ezhilarasan Venkatachalam
Salem
Tamil Based English Trainer

Comments

Popular posts from this blog

Manja kattu maina song translation Venkatachalam Salem

Manja kattu maina song Translation - ॥= Hard words / meaning in Tamil or vocabulary    .. ஆண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished OTHER WORKS OF EZHILARASAN VENKATACHALAM   மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love பெண் : காதல் கலவரம் பூக்கும் Love violence provoked அது இரவினில் மேலும் தாக்கும் And night it is going to explode ஆண் : பூக்கள் பொதுக்குழு கூட்டும் Flowers will conduct a meeting நீ தலைமை தாங்க கேட்கும் And will elect you as their leader பெண் : மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா Oh my turmeric forest maina She cuddled me a while and vanished மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போனா She vanished into the forest After declaring her love ஆண் : கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு Oh virgin ! kisses are investment in love இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது No losses, whole night only profits are exp...

Translation of thaedi sooru nitham thindru Ezhilarasan

thaedi sooru nitham thindru TRANSLATION of barathiyar song Thaedi choru nitham thindru -- ............................................. தேடி சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி — Daily begging for food ... Idling my time by gossiping .. மனம் வாடித் துன்பமிக உழன்று — பிறர் வாடப் பலசெயல்கள் செய்து Then finally one day losing heart, after suffering from many hardships ... Doing many jobs that hurt others . .. நரை கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் Soon getting grey hairs and reaching old age ...[=] Finally one day, getting withered away by the unavoida ble natural sunset of ones life... பல வேடிக்கை மனிதரைப் போலே — நான் வீழ்வே னன்றுநினைத் தாயோ? Do you think I will pass away casually like this ? [=] Like the umpteen Don Quixotes or funny people of this world? - பின்னுரை -- நண்பர்களே, பாரதியார் கவிதைகள் எல்லோருக்கும் மனதில் உரம் சேர்க்கும் ... அவர் கவிதைகளில் சிலவற்றை ஆங்கில படுத்த நீண்ட நாட்களாக அவா .. இதோ... தேடி சோறு நிதம் தின்று பல...

Moothurai translation song 11 to 20 Ezhilarasan

Song 11 to 20 moothurai Translation Ezhilarasan Venkatachalam Translation - மூதுரை - ஔவை - 11 to 20 . .[=]  Moothurai -- songs 1 to 10    [=] [=]   Moothurai -- songs 21 to 30  Song 11. பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி ஏற்றம் கருமம் செயல். பொருள்:  நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே  ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை. //  We only use the rice grains from the rice crop. However, if the grain is separated from the husk, then it does not grow any further. அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை. //  Similarly, even if a person has done a great job with his exceptional talent, unless due help is rendered to him, it may not bear any fruit. Song 12. மடல் பெரிது தாழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல் பெரிது மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகிவிடும். பொருள்: தாழம்பூ...